Published : 13 Aug 2019 09:23 AM
Last Updated : 13 Aug 2019 09:23 AM

தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்களை அரசுடைமை ஆக்கியதை மறுபரிசீலனை செய்யும் எண்ணம் உள்ளதா? - தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பேருந்து மோதி எத்தனை பேர் இறந்துள்ளனர், அவர்களின் குடும் பத்துக்கு எவ்வளவு பணம் இழப் பீடாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக போக்குவரத்து துறைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் தனியார் நிறுவ னத்தில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்த சண்முகம் (41) என்ப வர் கடந்த 2011 பிப்.23 அன்று தனது இருசக்கர வாகனத்தில் ராஜாஜி சாலையில் சென்றபோது, மாநகர பஸ் மோதி இறந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த மோட்டார் வாகன விபத்து வழக்கு களுக்கான தீர்ப்பாயம், சண்முகத் தின் மனைவி வாணி மற்றும் அவரது பெற்றோருக்கு ரூ. 45.29 லட்சம் இழப்பீடாக வழங்க 2015-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து அரசுப் போக்கு வரத்துக் கழகம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்த விபத்து அரசுப் போக்கு வரத்துக் கழக ஓட்டுநரின் அதிவேகம் மற்றும் கவனக்குறைவால் தான் நடந்துள்ளது. விபத்தில் இறந் துள்ள சண்முகம் மாதம் ரூ. 69,874 ஊதியமாக பெற்றுள்ளார். வருமான வரி அறிக்கைப்படி ஆண்டுக்கு ரூ.9.95 லட்சம் சம்பாதித்துள்ளார்.

எனவே அவரது குடும்பத்துக்கு தீர்ப்பாயம் வழங்க உத்தரவிட்ட இழப்பீட்டுத்தொகை ரூ.45.29 லட் சத்தை நாங்கள் ரூ.1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிடுகிறோம். மாநகர அரசுப் போக்குவரத்துக் கழகம் இந்த தொகையை 7.5 சதவீத வட்டி யுடன் 8 வாரங்களுக்குள் சம்பந்தப் பட்ட நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். அதன்பிறகு ஒரு வாரத் தில் இந்த தொகையை சம்பந்தப் பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த வழக்கை முடிக்கும் முன்பாக அரசுக்கு சில கேள்வி களை எழுப்புகிறோம். வங்கி களைப் போலவே பொதுமக்க ளுக்கு சேவை மனப்பான்மை யுடன் செயலாற்ற வேண்டும் என்பதற்காகவே அரசுப் போக்கு வரத்துக் கழகங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன. ஆனால் அதன் நோக்கமே தற்போது சீர்குலைந்து விட்டது. அரசுடைமையாக்கப் பட்டதன் காரணமாக நன்மைகளை விட தற்போது தீமைகள்தான் பெருகிக்கொண்டே செல்கிறது.

பெரும்பாலான அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் நிறுத்தங்களில் பேருந் துகளை நிறுத்தாமல், பயணிகளை ஓட விடுகின்றனர். சில ஓட்டுநர்கள் பயணிகள் ஏறுவதையும் இறங் குவதையும் கவனிக்காமல் பேருந்தை இயக்கி விலை மதிப் பற்ற உயிரின் இழப்புக்கு காரண மாகி விடுகின்றனர்.

சென்னையில் விதிகளை மீறும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுத்தால் உடனே ஓட்டுநர்கள் சாலையில் குறுக்கும், மறுக்குமாக பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பயணிகளுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை. ஆனால் தனியார் பேருந்துகளில் இந்த நிலைமை கிடையாது.

அரசுப் போக்குவரத்துக் கழகங் கள் நஷ்டத்தில் இயங்குகிறது என்றால் அதற்கு அரசுடைமை, ஊழல், அரசியல் மற்றும் தொழிற் சங்க தலையீடு, சரியான நிர்வாகத் திறன் இல்லாமை போன்றவை யும் ஒரு காரணம். அஜாக்கிரதை யாக செயல்படும் ஓட்டுநரின் கவனக்குறைவுக்கு போக்கு வரத்துக் கழகங்கள் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. எனவே, இந்த போக்குவரத்துக் கழங்களை தனி யார் மற்றும் அரசு சேர்ந்து கூட்டு பங்களிப்பாக ஏன் நடத்தக்கூடாது?

அதேபோல, கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் போக்குவரத் துக்கழக பேருந்துகள் மோதி எத்தனை விபத்துகள் ஏற்பட்டுள் ளன, அதில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர், இறந்தவர் களின் குடும்பத்துக்கு எவ்வளவு பணம் இழப்பீடாக வழங்கப்பட் டுள்ளது, விபத்துக்கு காரணமான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மீது துறை ரீதியாக, குற்ற வியல் ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதில் எத் தனை பேருக்கு தண்டனை வழங் கப்பட்டுள்ளது, தவறு செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் தொழிற்சங்கங்கள் குறுக்கீடு செய்கின்றனவா, விபத்து ஏற்பட அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் முறையாக பராமரிக்காததும் ஊழலும் ஒரு கார ணமா, ஏன் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் பயணிகளிடம் மரி யாதைக் குறைவாக நடந்துகொள் கின்றனர்?

இவற்றை கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் கழகங்கள் அரசு டைமை ஆக்கப்பட்டதை மறுபரி சீலனை செய்யும் எண்ணம் அரசுக்கு உள்ளதா? இந்த கேள்விகளுக்கு அரசுப் போக்குவரத்து துறைச் செயலர், தமிழக டிஜிபி மற்றும் அனைத்து கோட்டங்களைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்கள் ஆண்டு வாரியாக பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி கள், விசாரணையை வரும் செப்.5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x