Published : 11 Aug 2019 07:54 AM
Last Updated : 11 Aug 2019 07:54 AM

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 4 புலிக் குட்டி, 3 சிங்க குட்டிக்கு முதல்வர் பெயர் சூட்டினார்

சென்னை

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 4 புலிக் குட்டிகள் மற்றும் 3 சிங்கக் குட்டி களுக்கு முதல்வர் பழனிசாமி நேற்று பெயர் சூட்டினார்.

இதுதொடர்பாக அரசு வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் மற்றும் புலிகள் இயற்கையான சூழலில் பராமரிக்கப்பட்டு வருவதால், அவை இனப்பெருக்கத்தில் ஈடு பட்டு வருகின்றன. இங்கு 4 புலிக் குட்டிகள், 3 சிங்கக் குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை முதல்வர் பழனிசாமி நேற்று நேரில் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அவற்றுக்கு பெயர்களையும் சூட்டினார்.

ஆண் சிங்கக் குட்டிக்கு ‘பிரதீப்’ என்றும், பெண் சிங்கக் குட்டி களுக்கு ‘தக் ஷனா’, 'நிரஞ்சனா’ என்றும் பெயர் சூட்டினார். அதே போல், ஆண் புலிக் குட்டிகளுக்கு ‘மித்ரன்’, 'ரித்விக்’ என்றும், பெண் புலிக் குட்டிகளுக்கு 'யுகா’, ‘வெண் மதி’ என்றும் பெயர் சூட்டினார்.

வாழ்விடம் திறந்துவைப்பு

கடந்த ஆண்டு ஜூலை மாதம், வண்டலூர் பூங்காவுக்கு முதல்வர் பழனிசாமி வந்தபோது, இப்பூங்கா வுக்கு காண்டாமிருகம் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் இருந்து, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆண் காண்டா மிருகம் வரவழைக்கப்பட் டுள்ளது. அதற்கு ‘ராமு’ என்று பெயர் சூட்டிய முதல்வர், அதன் வாழ்விடத்தை பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர், வனத்துறை தலைவர் துரைராசு, தலைமை வன உயிரின காப்பாளர் சஞ்சய் வத்சவா, உயிரியல் பூங்கா இயக்குநர் யோகேஷ் சிங் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x