Published : 09 Aug 2019 10:07 AM
Last Updated : 09 Aug 2019 10:07 AM

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

குற்றாலம் பிரதான அருவியில் அபாய வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டுவதால், குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது. இதனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை களின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந் துள்ளது.

மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழையால் நேற்று முன்தினம் 65 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து நேற்று காலையில் 77.50 அடியாக இருந்தது. இது போல் நேற்றுமுன்தினம் 80 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 28 அடி உயர்ந்து நேற்று காலையில் 108 அடியாக இருந்தது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 54 அடியாக இருந்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 8,881 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மணிமுத்தாறு அணைக்கு 1,958 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 36.10 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. கடனா, ராமநதி, கொடுமுடியாறு அணை கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும், பிறஇடங் களிலும் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 110, சேர்வலாறு- 47, மணிமுத்தாறு- 22.49, கடனா- 20, ராமா நதி- 20 , கருப்பா நதி- 28, குண்டாறு- 51, நம்பியாறு- 20, கொடு முடியாறு- 75, அடவிநயினார் கோயில்- 55 , அம்பாசமுத்திரம்- 37.60, ஆய்குடி- 2.80 , சேரன்மகா தேவி- 9, நாங்குநேரி- 28.20, பாளை யங்கோட்டை- 3.40 , ராதாபுரம்- 66.20, சங்கரன்கோவில்- 1 , செங் கோட்டை- 39, சிவகிரி- 1 , தென் காசி- 18.30, திருநெல்வேலி- 1.50.

குற்றாலத்தில் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் நேற்று 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் புலியருவி, சிற்றருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x