Published : 09 Aug 2019 07:55 AM
Last Updated : 09 Aug 2019 07:55 AM

குடிநீர் விநியோகம், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட அரசு திட்டங்களை களஆய்வு செய்து அறிக்கை: மாதம்தோறும் அனுப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்

சென்னை

குடிநீர் விநியோகம், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மாதம்தோறும் கள ஆய்வு நடத்தி, அறிக்கை அனுப்ப வேண்டும் என்று ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். இந்த ஆய்வுக் கூட்டம் 4 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் அரசால் செயல் படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங் கள், மாநில வளர்ச்சித் திட்டங்கள், மழைநீர் சேகரிப்பு, குடிமராமத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் களுடனான 2 நாள் ஆய்வுக்கூட்டத் துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இக்கூட்டம் நேற்று தொடங்கியது.

இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங் கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதய குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

முதல்வர் பழனிசாமி தனது தொடக்க உரையில் கூறியதாவது:

பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் தமிழ்நாடு நீர்வள ஆதாரம், மேலாண்மை இயக்கத்தை தொடங்கி வைத்துள் ளேன். நமது நீராதாரங்களை பாது காப்பதுடன், அதை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும். நீர்நிலைகள் மாசுபடாமல் தடுப் பதுடன், பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்யவும் வேண்டும். ஒரு சொட்டு நீரைக்கூட வீணாக் காமல் அதை சேமிக்க வேண்டும்.

வீட்டுமனை பட்டா

வீட்டுமனை பட்டா இல்லாதவர் களை கணக்கெடுத்து அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அம்மா திட்டம், ஆதிதிராவிடர், பழங்குடி யினர் குடியிருப்புகளுக்கு அடிப் படை வசதிகளை ஏற்படுத்த வேண் டும். அரசின் திட்டங்களான குடிமரா மத்து, மழைநீர் சேகரிப்பு, பசுமை வீடுகள், பொது விநியோகம், சத் துணவு, அங்கன்வாடி குழந்தைகள் திட்டம், முதியோர் ஓய்வூதியம், கிராமப்புற, நகர்ப்புறங்களில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு, சுகாதாரம், மக்கள் குறைதீர்வு நாள் மனுக்கள் மற்றும் அதற்கு தீர்வு காணுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு, அம்மா இருசக்கர வாகன திட்டம், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, வேளாண் சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பாக ஒவ்வொரு மாதமும் கள ஆய்வு நடத்த வேண்டும்.

கள ஆய்வு விவரங்கள் அடங்கிய ஆய்வறிக்கையை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாதந் தோறும் என் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த ஆய்வுக் கூட்டம் 4 மாதங்களுக்கு ஒருமுறை என் தலைமையில் நடக்கும்.

தமிழக அரசின் முகமாக மாவட்ட நிர்வாகம் விளங்குகிறது. ஆட்சியராகிய நீங்கள் மாவட்ட அளவில் அரசின் கண்களாகவும், கரங்களாகவும் செயல்பட்டால், அரசின் திட்டங்கள் மக்களை உரிய முறையில் சென்றடையும்.

தமிழக அரசு மக்களின் அரசு என்பதையும், ஏழை, எளியோரின் நலன் காக்கும் அரசு என்பதை யும், அவர்களுக்காக செயலாற்றும் அரசு என்பதையும் மக்கள் உண ரும்படி செய்ய, மாவட்ட ஆட்சியர் கள் தங்கள் மாவட்டங்களில் சுறு சுறுப்பாக இயங்கி அரும்பணியாற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

இக்கூட்டத்தில் தமிழக தலை மைச் செயலர் கே.சண்முகம், நில நிர்வாக ஆணையர் வி.கே.ஜெயக் கொடி, வருவாய் நிர்வாக ஆணை யர் கே.சத்யகோபால் என மாவட்டங் களின் கண்காணிப்பு அலுவலர் களாக நியமிக்கப்பட்டுள்ள பல் வேறு துறைகளின் செயலர்கள் பங் கேற்றனர்.

16 ஆட்சியர்கள் பங்கேற்பு

முதல் நாளான நேற்று கன்னி யாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, ராம நாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரிய லூர், பெரம்பலூர், தஞ்சை, திரு வாரூர், நாகை, கரூர், புதுக் கோட்டை ஆகிய 16 மாவட்டங்களின் ஆட்சியர்கள் பங்கேற்றனர்.

ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு ஆட்சியருக்கும் 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில், அவர் கள் தங்கள் மாவட்டங்களில் செயல் படுத்தப்படும் அரசு திட்டங்களின் தற்போதைய நிலை உள்ளிட்ட விவரங்களை தெரிவித்தனர். அவ் வப்போது தேவையான விளக் கங்கள், அறிவுரைகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இன்றும் நடக்கிறது

ஆட்சியர்களுடனான 2-ம் நாள் ஆய்வுக் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொள்கின்ற னர். வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடப்பதால், வேலூர் ஆட்சியர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

தமிழக அரசால் செயல்படுத்தப் படும் திட்டங்கள், மாவட்ட அளவில் தேவைப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடனும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடனும் முதல்வர் ஆண்டுதோறும் ஆலோசனை நடத் துவது வழக்கம். 4 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஆட்சி யர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்டது. மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட நிகழ்வுகளால் கடந்த மார்ச் மாதம் இந்த மாநாடு நடத்தப்படவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x