Published : 09 Aug 2019 07:14 AM
Last Updated : 09 Aug 2019 07:14 AM

வேலூர் தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை: 10.30 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியும்; ஏற்பாடுகள் குறித்து சத்யபிரத சாஹூ தகவல் 

சென்னை

வேலூர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று நடக்க உள்ள நிலையில், பாதுகாப்பு உட்பட அதற்கான ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரத சாஹூ தெரி வித்துள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதி யில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இறுதி நிலவரப்படி, இத்தொகுதியில் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகி யிருந்தன. இதையடுத்து, மின் னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக் கப்பட்டுள்ளன. இந்நிலை யில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கு கிறது.

வாக்கு எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது:

வாக்கு எண்ணிக்கைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அறை வாயில், வாக்கு இயந்திரம் உள்ள பகுதிகளில் துணை ராணுவப் படையினர் பணியில் இருப்பார்கள். அடுத்த நிலையில், தமிழக ஆயுதப் படையினர், அதன்பிறகு வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் உள்ளூர் காவல் துறையினர் பணியில் இருப் பார்கள். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வேலூர் மற்றும் ஆம்பூர் தொகுதியில் தலா 18 சுற்றுகள், அணைக்கட்டு, கே.வி.குப்பம், வாணியம்பாடி தொகுதிகளில் தலா 19 சுற்றுகள், குடியாத்தம் தொகுதியில் மட்டும் 21 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. முதலில் தபால் வாக்குகள் ஒரு பகுதியில் எண்ணப்படும். மற் றொருபுறம் மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணும் பணி நடக்கும். காலை 10.30 மணியளவில் முன்னணி நிலவரம் தெரியவரும். வாக்கு எண்ணிக்கை முழுமை யாக வீடியோ பதிவு செய்யப் படும். ஏற்கெனவே உள்ள நடை முறைப்படி, ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 5 விவிபாட் இயந் திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, இறுதியாக எண்ணப்படும்.

இது தவிர, மின்னணு இயந் திரத்தில் மாதிரி வாக்குகள் அழிக் கப்படாமல் இருந்தால் தேர்தல் பார்வையாளர் மற்றும் அரசியல் கட்சிகளின் அனுமதியுடன் விவிபாட் பதிவுகள் எண்ணப்படும். பாதுகாப்பு பணியை பொறுத்த வரை ஆயுதப்படையினர், உள்ளூர் போலீஸார் என 1,073 பேரும், 100 துணை ராணுவப்படையினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தம்

இன்று (நேற்று) மாலை, இந்திய தேர்தல் ஆணைய மூத்த துணை ஆணையர் சந்தீப் சக்சேனா தலைமையில், வாக் காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. வீடியோ கான்பரன்ஸ் முறையில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் இதில் பங்கேற்று, முன்னேற்பாடுகள் மற்றும் ஆலோ சனைகளை பகிர்ந்து கொள் கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x