Published : 07 Aug 2019 06:41 PM
Last Updated : 07 Aug 2019 06:41 PM

அரசின் நீர் மேலாண்மையால் ஒரு சொட்டு நீர் கூட வீணாவதில்லை: முதல்வர் 

அரசின் நீர் மேலாண்மையால் ஒரு சொட்டு நீர் கூட வீணாவதில்லை என்று முதல்வர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 30-வது ஆண்டுவிழா சென்னை தரமணியில் நடைபெற்றது. 'வளங்குன்றாத வளர்ச்சிக்கான குறிக்கோள்கள்களை அடைவதற்கும் பருவநிலை மீட்சிக்கான அறிவியலைப் பலப்படுத்துவதற்குமான' கருத்தரங்கமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, ''இந்த ஆண்டும் பருவமழை பொய்த்துப் போனதால் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், கிடைக்கும் ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிப்பது முக்கியமானது.

எனினும் நீர் மேலாண்மைத் திட்டங்கள் தமிழகத்தில் மிகச்சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் பருவ காலங்களில் கிடைக்கும் மழை நீரை சேமிக்க வேண்டி, குடிமராமத்துப் பணிகள் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு சீர்செய்யப்படுகிறது.

அதேபோல ஓடை, நதியின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி, நீரைச் சேமிக்க வகை செய்கிறோம். இதனால் ஒரு சொட்டு நீர் கூட வீணாவதில்லை. விவசாயப் பெருமக்களுக்குத் தேவையான நீர் கிடைக்கிறது. குடிப்பதற்குத் தேவையான நீரும் கிடைக்கிறது'' என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x