Published : 06 Aug 2019 10:34 AM
Last Updated : 06 Aug 2019 10:34 AM

அரசு நிர்ணயித்த கட்டணத்தில் இயக்குவதால் ‘உங்கள் மீட்டர் ஆட்டோ’ ஓட்டுநர்களுக்கு அச்சுறுத்தல்?- பாதுகாப்பு வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுக்க வந்த ‘உங்கள் மீட்டர் ஆட்டோ' ஓட்டுநர்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்

ஜெ.ஞானசேகர்

திருச்சி

அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோவை இயக்குவதால் தங்க ளுக்கு சக ஓட்டுநர்களால் அச்சுறுத் தலுக்கு ஏற்பட்டுள்ளதாக ‘உங்கள் மீட்டர் ஆட்டோ’ ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆட்டோக்களில் கட்டுப்பாடின்றி கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்ததால், 2014-ல் தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, 1.8 கி.மீ தொலைவுக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25, அதற்கடுத்து ஒவ்வொரு கி.மீ தொலைவுக்கும் ரூ.12, காத்திருப்புக் கட்டணமாக ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ரூ.3.50, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை கட்டணத்தில் கூடுதலாக 50 சதவீதம் மற்றும் ஒரு மணி நேர காத்திருப்புக்கு ரூ.42 என்று நிர்ணயிக்கப்பட்டது.

இந்தநிலையில், திருச்சி மாவட் டத்தில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் ஆட்டோவை இயக்கு வதால் சக ஆட்டோ ஓட்டுநர் களாலேயே அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகக் கூறி, தங்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் பயணிகளை ஏற்றி- இறக்கிச் செல்ல நிறுத்தம் ஒதுக்கித் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘உங்கள் மீட்டர் ஆட்டோ’ ஓட்டுநர்கள் நேற்று மனு அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக ‘உங்கள் மீட்டர் ஆட்டோ’ ஓட்டுநர் சங்கத்தின் தலைவர் க.சுந்தரபாண்டியன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

நாங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிப்பதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள் கணிசமாக உயர்ந்துள்ளனர். ஆட்டோ நிறுத்தம் உள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான் சவாரி ஏற்றுவோம். அப்போதும், ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் வந்து பயணிகள் முன்னிலையிலேயே எங்களைத் தாக்குவது, ஆட்டோ சாவியைப் பறித்துக் கொள்வது என அச்சுறுத்தி வருகின்றனர். எனவே, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மத்திய பேருந்து நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையம், கோட்டை ரயில் நிலையம், திருவானைக் காவல், ரங்கம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் எங்கள் ஆட்டோக்களை நிறுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.

இதுதொடர்பாக சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் எஸ்.மணிகண் டனிடம் கேட்டபோது அவர் கூறியது: அவர்கள் யார் மீது புகார் கூறுகின்றனர் என்பது தெரிய வில்லை. மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ இயக்குவதை யாரும் எதிர்க்கவில்லை. அதேபோல, மாநிலம் முழுவதும் ஒரே ஆட்டோ கட்டணம் நிர்ணயிப்பது சரியான நடவடிக்கை அல்ல. மாவட்டந்தோறும் ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. மேலும், ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர் களின் வருவாயைப் பாதிக்கும் வகையில் ஆட்டோ நிறுத்தங் களுக்கு அருகில் நின்று சவாரி ஏற்றுவது நியாயமில்லை” என்றார்.

இதுதொடர்பாக மாநகர போலீஸ் வட்டாரங்களில் விசாரித் தபோது“ஆட்டோவில் ஏறும் மக்களைத் தடுப்பதோ, ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுப்பதோ சட்டப்படி குற்றம். இதுகுறித்து புகார் ஏதும் வரவில்லை. புகார் வந்தால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x