Published : 06 Aug 2019 07:38 AM
Last Updated : 06 Aug 2019 07:38 AM

சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் முறைகேடு குற்றச்சாட்டு; தேவாரம் மேற்பார்வையில் விசாரணை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை 

சென்னையில் நடைபெறும் மாற் றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வால்டர் தேவாரம் மேற்பார்வையில் விசா ரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கான சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி சென் னையில் கடந்த 3-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் போட்டி களுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்யவில்லை என்றும், வீரர்கள் தேர்வில் பாரபட்சம் காட்டப் பட்டுள்ளதாகவும், நிதி கையாடல் நடந்துள்ளதாகவும் கூறி, சென்னை யைச் சேர்ந்த மனோரஞ்சனி என்ப வர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசா ரணைக்கு வந்தபோது இப்போட்டி களுக்குத் தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், மனுதாரர் குறிப் பிடும் 3 விளையாட்டு வீரர்களை இப்போட்டிகளில் பங்கேற்க அனு மதிக்க வேண்டும் என பாரத் சிறப்பு ஒலிம்பிக் தமிழகப் பிரிவு இயக்குநர், ஆசிய பசிபிக் சிறப்பு ஒலிம்பிக் மேலாளர் ஆகியோ ருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆக.5-க்கு தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட, பாரத் சிறப்பு ஒலிம்பிக் தமிழகப் பிரிவு இயக்குநர் பால் தேவசகாயம் மற்றும் ஆசிய பசிபிக் சிறப்பு ஒலிம்பிக் மேலா ளர் ஜான் நாகராஜன் ஆகியோர் நேரில் ஆஜராகி, இந்த கால் பந்து போட்டிகளில் எந்த முறை கேடுகளும் நடைபெறவில்லை என்றும், தங்களுக்கு எதிராக எந்தப் புகாரும் தரப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

அப்போது மனுதாரர் தரப்பில், தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கத் தலைவரான ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதி்காரி வால்டர் தேவாரம் இந்தப் போட்டிகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் இந்திய அமைப்பின் நிதி ஆதாரங்கள் குறித்தும், வீரர்கள் தேர்வு முறை குறித்தும், அமைப்பின் சட்ட திட்டங்கள் குறித் தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவி்ட்டனர். மேலும், சென்னை யில் நடைபெறும் போட்டிகளில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடு புகார் குறித்து ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வால்டர் தேவாரத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தி 2 வாரங் களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என மாற்றுத் திறனாளிகள் நல ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x