Published : 21 Jul 2015 08:12 AM
Last Updated : 21 Jul 2015 08:12 AM

சட்டப்பேரவையை கூட்டாதது ஜனநாயக விரோதம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு தலைவர் கருத்து

`தமிழகத்தில் சட்டப்பேரவையை கூட்டாமல் இருப்பது ஜனநாயக விரோதமாகும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவை குழு தலைவரும், சிஐடியு மாநிலத் தலைவருமான அ.சவுந்திரராசன் எம்எல்ஏ தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியா ளர்களிடம் நேற்று அவர் கூறிய தாவது:

மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக வரும் செப்டம்பர் 2-ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் 11 மத்திய தொழிற்சங்கங்கள் பங்கேற் கின்றன. 20 கோடி பேர் பங்கேற்பார் கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பல நகரங் களில் போராட்டங்கள் நடைபெறு வதுடன், அன்று கடைகளும் அடைக்கப்படும். அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து மற்ற அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள்.

மூடப்பட்ட அரசுப் பள்ளிகள்

தமிழகத்தில் 500-க்கும் மேற் பட்ட உள்ளாட்சிகளில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. 80 சதவீத உயர்கல்வி தனியார்வசம் உள்ளது. இச்சூழலில் உயர்கல்வி யில் முன்னேற்றம் என்று அமைச் சர் புளகாங்கிதம் அடைவது வேடிக்கையாக உள்ளது. தமிழ கத்தில் உயர்கல்வி படித்தவர்களில் 80 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ரேஷன் கடை களில் 40 சதவீதம்கூட பொருட்கள் விநியோகம் இல்லை. 1.25 லட்சம் சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன.

ஜனநாயக விரோதம்

எப்போதும் இல்லாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது. தற்கொலைகளும், விபத்துகளும் நடப்பதில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. விவசாயிகள் மத் தியில் எவ்வித மாற்றமும் ஏற்பட வில்லை. இதுபோன்ற பல்வேறு விவகாரங்களையும், மக்கள் பிரச்சினைகளையும் பேசுவதற்கு சட்டப்பேரவை கூட்டத்தையும் கூட்டுவதில்லை.

ஆண்டுக்கு குறைந்தது 120 நாட்களாவது சட்டப் பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும். கடந்த பல ஆண்டுகளாகவே 50 முதல் 60 நாட்கள் கூட்டம் நடந்தாலே பெரிது என்றாகிவிட்டது. அதுவும் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் 12 நாட்கள் மட்டுமே கூட்டம் நடைபெற்றிருக்கிறது. மக்கள் பிரச்சினைகளை பேசி தீர்வுகாண சட்டப் பேரவையை கூட்டாமல் இருப்பது ஜனநாயக விரோதம்.

யாருடன் கூட்டணி?

அதிமுக ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்காக அக்கட்சியுடன் கூட்டு சேர முடியாது. 16 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக மக்கள் விரோத முடிவுகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டிருக் கிறது. அக்கட்சியுடனும் உறவு வைக்க வாய்ப்பில்லை.

இந்த இரு கட்சிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக் கின்றன. எனவே தமிழகத்தில் மதசார்பற்ற சக்திகள், ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து மக்கள் இயக்கங்களை நடத்தி வருகிறோம். அது 3-வது அணியா அல்லது மாற்று அணியா என்று இப்போது சொல்ல முடியாது.

சட்டப்பேரவை தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x