Published : 05 Aug 2019 10:09 AM
Last Updated : 05 Aug 2019 10:09 AM

பல்கலை., கல்லூரிகளில் அதிகரித்துவரும் பிஹெச்.டி. ஆய்வுகள் 

த.சத்தியசீலன்

கோவை

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 8 ஆண்டுகளாக பிஹெச்.டி. ஆய்வு கள் அதிகரித்து வருகின்றன.

நாடு முழுவதும் 48 மத்திய பல் கலைக்கழகங்கள், 399 மாநில பல்கலைக்கழகங்கள், 126 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள், 334 தனியார் பல்கலைக்கழகங்கள் உள் ளன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன.

இவற்றில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளும், சான்றிதழ் படிப்புகள், பட்டயப் படிப்புகள், எம்.ஃபில்., பிஹெச்.டி. போன்ற ஆராய்ச்சி படிப்புகளும் நடத்தப் பட்டு வருகின்றன. இவற்றில் கடந்த 8 கல்வி ஆண்டுகளில் பிஹெச்.டி. ஆராய்ச்சி 10 சதவீதம் ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு செயலர் பேராசிரி யர் ரஜ்னிஷ் ஜெயின் தெரிவித்திருப்பதாவது:

இந்தியாவில் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், சமூக அறிவியல், வணிகவியல், சட்டம், மேலாண்மை, மானுடவியல் படிப்புகளைக் களமாகக் கொண்டு உயர் கல்வியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகள் குறித்து, மத்திய அரசின் மனிதவளத்துறை அகில இந்திய அளவில் மேற்கொண்ட கள ஆய்வில், கடந்த 2010-11 முதல் 2017-18 வரையிலான காலக்கட்டத் தில் பிஹெச்.டி. ஆய்வு 77,798-ல் இருந்து 1,61,412-ஆக, அதாவது இருமடங்காக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சராசரியாக ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

2012-13 முதல் 2016-17 வரை பிஹெச்.டி. பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் 7.26 சதவீதம் அதிகரித்து 23,630-ஆக உள்ளது. ஆண்டுதோறும் பெண் ஆய்வாளர்களின் எண்ணிக்கை 9.35 சதவீதம், ஆண் ஆய்வாளர்கள் எண்ணிக்கை 5.86 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிஹெச்.டி. படிப்பில் 2010-11-ல் 47,964 ஆண்களும், 29,834 பெண் களும் என 77,798 பேரும், 2011-12-ல் 49,296 ஆண்களும், 32,134 பெண்களும் என 81,430 பேரும், 2012-13-ல் 55,654 ஆண்களும், 39,771 பெண்களும் என 95,425 பேர் சேர்ந்தனர்.

2013-14-ல் 64,772 ஆண்களும், 43,118 பெண்களும் என 1,07,890 பேரும், 2014-15-ல் 69,584 ஆண் களும், 47,717 பெண்களும் என 1,17,301 பேரும், 2015-16-ல் 74,460 ஆண்களும், 51,855 பெண்களும் என 1,26,451 பேர் சேர்ந்தனர்.

2016-17-ல் 81,795 ஆண்களும், 59,242 பெண்களும் என 1,41,037 பேரும், 2017-18-ல் 92,570 ஆண்களும், 68,842 பெண்களும் என 1,61,412 பேர் சேர்ந்தனர். 2012-ல் 23,630, 2013-ல் 23,861, 2014-ல் 21,830, 2015-ல் 24,471, 2016-ல் 28,779, 2017-ல் 34,000 பேர் பிஹெச்.டி. பட்டம் பெற்றுள்ளனர். இதில் பெண்கள் 9.3 சதவீதம், ஆண்கள் 5.86 சதவீதம். இவர்களால் அதிக பட்சமாக அறிவியலில் 30 சதவீத மும், பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்தில் 26 சதவீதமும், குறைந்த பட்சமாக வணிகவியல் மற்றும் அயல் மொழிகளில் 3 சதவீதமும் ஆய்வு கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்றார்.

எம்.ஃபில். ஆராய்ச்சி படிப்பு

எம்.ஃபில். படிப்பில் 2010-11-ல் 12,579 ஆண்களும், 12,522 பெண்களும் என 25,101 பேரும், 2011-12-ல் 15,913 ஆண்களும், 18,241 பெண்களும் என 34,154 பேரும், 2012-13-ல் 13,257 ஆண்களும், 17,117 பெண்களும் என 30,374 பேரும் சேர்ந்தனர்.

2013-14-ல் 13,632 ஆண்களும், 17,748 பெண்களும் என 31,380 பேரும், 2014-15-ல் 14,107 ஆண்களும், 19,264 பெண்களும் என 33,371 பேரும், 2015-16-ல் 17,473 ஆண்களும், 25,060 பெண்களும் என 42,523 பேரும்,

2016-17-ல் 16,464 ஆண்களும், 26,803 பெண்களும் என 43,267 பேரும், 2017-18-ல் 12,287 ஆண்களும், 21,822 பெண்களும் என 34,109 பேர் சேர்ந்தனர். சராசரியாக எம்.ஃபில். ஆராய்ச்சி படிப்பில் 5.2 சதவீதம் பேர் சேர்ந்து வருவதாக மத்திய அரசின் மனிதவளத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x