Published : 04 Aug 2019 07:47 AM
Last Updated : 04 Aug 2019 07:47 AM

விவசாய பொருட்களை நேரடி விற்பனை செய்ய செயலி வெளியீடு; நாட்டு காய்கறிகளின் விவசாயத்தை பரவலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்: வேளாண்மை துறை செயலாளர் உறுதி 

ககன்தீப் சிங் பேடி

சென்னை 

நாட்டு காய்கறிகள் சாகுபடியை பரவலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உறுதியளித்துள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு பார்ம் லைப் ரீடெய்ல் நெட்வொர்க் நிறுவனம் சார்பில் ‘விதை விதைத்தாய்' நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சமூகநலத் துறை ஆணையர் அமுதவல்லி, தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ரஜேந்திரன், நல்ல கீரை நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.ஜெகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விவசாய பொருட்களை இடைதரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்ய ‘பார்ம் லைப்' என்ற செயலியை  ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி விம்ருத்தாநந்தா வெளியிட்டார். பின்னர், நிகழ்ச்சியில் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது:

தமிழகத்தில் காய்கறி, பழங் களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. ஒரு நபர் ஒரு நாளுக்கு 400 கிராம் காய்கறிகளை சாப்பிட வேண்டும். தமிழகத்தில் 63 லட்சம் மெட்ரிக் டன் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இன்னும் 21 லட்சம் மெட்ரிக் டன் காய்கறிகளை உற்பத்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது.

எனவே காய்கறிகள், பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிராமத்தில் குறைந்தது 25 ஏக்கரில் காய் கறியை விவசாயிகள் உற்பத்தி செய்ய அவர்களை ஊக்கப் படுத்த உள்ளோம்.

இதன்மூலம், அந்த கிராமத் தைச் சேர்ந்தவர்களாவது காய்கறி தேவையில் தன்னிறைவு பெற முடியும். நாட்டு காய்கறி களை மீட்டெடுக்கும் முயற்சி சிறப்பானது. உங்களிடம் கற்றுக் கொண்டு அரசு திட்டங்களில் நல்லது செய்ய முடியுமா என்று ஆலோசிக்கப்படும்.

மீட்டெடுக்கப்பட்ட பாரம் பரிய விதைகளை கொடுத் தால் அரசு விதை பண்ணையில் விதைத்து விதைகளை பெருக்கி விவசாயிகளுக்கு வழங்க முயற்சி எடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து, நிகழ்ச்சி யில் பங்கேற்றவர்கள் மீட்டெடுக் கப்பட்ட 150 வகையான பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகளை பெட்டிகளில் விதைத்தனர். இந்த விதைகள் பராமரிக்கப்பட்டு வரும் அக்டோபர் 2-ம் தேதி பெண் விவசாயிகளிடம் வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x