Published : 02 Aug 2019 08:15 AM
Last Updated : 02 Aug 2019 08:15 AM

ரூ.20 கோடி கடன் குறித்து பேச்சு நடத்தியபோது வங்கியில் மயங்கி விழுந்த விவசாயி உயிரிழப்பு: விஷம் குடித்து தற்கொலை என போலீஸ் தகவல்

மகேஸ்வரன்

கோவை 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள தோரணம்பட்டியை சேர்ந் தவர் பூபதி என்ற மகேஸ்வரன்(61), விவசாயி. இவருக்கு சொந்தமாக 7 ஏக்கர் இடம் உள்ளது. மகேஸ்வ ரன் உட்பட 23 பேர் சேர்ந்து கடந்த 2005-ல் ஈரோட்டை தலைமையிட மாகக் கொண்டு பால் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கினர். இதற்காக, அப் போது தங்களது நிலத்தை அட மானம் வைத்து கோவையை தலை மையிடமாகக் கொண்டு செயல்ப டும் வங்கியின் சேலம் கிளையில், ரூ.9 கோடியே 93 லட்சம் தொகை கடனாக பெற்றிருந்தனர். ஆனால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வங்கி அளித்த கடன் தொகை வாராக் கடன் ஆனது.

சில ஆண்டுகள் கழித்து இந்த கடனை வசூலிக்க, வங்கி நிர்வாகத் தினர் சார்பில், 23 பேரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 23 பேரில் 13 பேர் பெரிய நிலதாரர்கள், 10 பேர் சிறிய நிலதாரர்கள் ஆவர். எனவே, பெரிய நிலதாரர்களான மகேஸ்வரன் உட்பட 13 பேர் இந்த வாராக் கடன் தொகையை அளிப்பது தொடர்பாக, கடந்த 2 ஆண்டுகளாக குறிப்பிட்ட நாட்க ளுக்கு ஒரு முறை வங்கி நிர்வாகத் தினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். நடப்பு மார்ச் மாத நிலவரப்படி வட்டித் தொகையை சேர்த்து இந்த வாராக்கடன் ரூ.20 கோடி ஆனது. வழக்கம்போல் நேற்று நடந்த பேச்சுவார்த்தைக்கு மகேஸ்வரன் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.

அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, மகேஸ்வரன் திடீரென மயங்கி விழுந்தார். அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘‘வங் கிக்கு வருவதற்கு முன்னரே மகேஸ் வரன் பூச்சி மருந்து சாப்பிட்டுள் ளார். பேச்சுவார்த்தை நடக்கும் போது சரிந்து விழுந்து இறந்துள் ளார். மகேஸ்வரன் எழுதி வைத்தி ருந்த கடிதமும் கைப்பற்றப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது சடலத்தை குடும்பத்தினர் பெற்றுச் சென்றனர்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x