Published : 01 Aug 2019 10:01 AM
Last Updated : 01 Aug 2019 10:01 AM

வேலூர் மக்களவை தேர்தலில் வெற்றிக்காக போராடும் அதிமுக-திமுக வேட்பாளர்கள்: சிறுபான்மையினர் வாக்குகளை கவர வியூகம் 

வ.செந்தில்குமார்

வேலூர் 

வேலூர் மக்களவைத் தொகுதியின் வெற்றிக்காக அதிமுக, திமுக வேட்பாளர்கள் கடுமையாக போராடி வருவதுடன், சிறுபான் மையினர் வாக்குகளை கவரு வதற்கான வியூகங்களை வகுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின் றனர்.

வேலூர் மக்களவைத் தேர்தல் பணப் பட்டுவாடா புகார் காரணமாக ஏப்ரல் 16-ம் தேதி நிறுத்தப்பட்டது. இந்தத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. வேலூர் தேர்தலை அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் புறக்கணித்த நிலையில், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் எதிர்கொள்கின்றனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலில் 37 இடங்களை கைப்பற் றிய திமுக கூட்டணி, தேனியில் அதிமுகவின் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றிபெற்றார். எனவே, வேலூர் தேர்தல் அறிவிப்பு வெளியான ஜூலை 4-ம் தேதி முதல் வேலூர் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது. வேலூர் தொகுதியை கைப்பற்றியே தீர வேண்டிய கட்டாயம் அதிமுக, திமுகவுக்கு அரசியல் ரீதியான நெருக்கடியாக மாறியுள்ளது.

அதிமுக சார்பில் வேலூர் தேர்தலுக்காக 30 அமைச்சர்களை யும், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செய லாளர்கள் உள்ளிட்ட பெரும் படை யுடன் களத்தில் இறங்கி தேர்தல் பணியில் பம்பரமாக சுழன்று வரு கின்றனர். மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மூத்த அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதி யில் தங்கியுள்ள அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள், சங்கத்தினர் களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

மூன்று லட்சத்துக்கும் அதிகமான சிறுபான்மையினர் வாக்குகளை கொண்டுள்ள தொகுதி என்பதால் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவை பிரச்சார களத்தில் காண முடியவில்லை. அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத் துக்கு ஆதரவாக அன்பு மணி ராமதாஸ், பிரேமலதா விஜய காந்த், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பிரச்சாரத்துக்கு வந்த நிலையில் பாஜக சார்பில் யாருமே வரவழைக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

சிறுபான்மையினர் வாக்குகளை பெற சமீபத்தில் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்ற முகமது ஜான் மூலம் வியூகம் வகுத்து வருகின்றனர். ஒரு வேளை சிறுபான்மையினர் வாக்குகளை பெற முடியாவிட்டால் அதை கிராமப்புற மக்களின் வாக்குகள் மூலம் ஈடுகட்ட திட்டம் வகுத்துள்ளனர்.

அதிமுக வேட்பாளருக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலா இரண்டு நாட்கள் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுள் ளனர். வரும் 3-ம் தேதியுடன் பிரச்சாரம் முடிய உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்றும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளையும் இரண்டாம் கட்ட பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

ஆளுங்கட்சியின் வேகத்துக்கு ஈடுகட்டும் வகையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்துக்காக திமுகவின் முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் களமிறங்கியுள்ள னர். கூட்டணி கட்சி தலைவர்கள் கடைசி நேரத்தில் பிரச்சாரத்துக்கு வந்துள்ள நிலையில் இது திமுகவின் தனிப்பட்ட தேர்தல் பிரச்சார களமாக உள்ளது. சிறுபான்மையினர் வாக்குகளை தங்கள் பக்கம் தக்கவைக்க வேண்டும் என்ற கணக்கில் திமுகவினர் பணியாற்றி வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின், மூன்று நாட்கள் தங்கியிருந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதுடன் இன்றும், நாளையும் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். மகன் கதிர் ஆனந்த்தின் வெற்றிக்காக துரைமுருகன் தனியாக சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருவதுடன் திமுக படை பலத்தை அவர்தான் பின்னிருந்து இயக்கி வருகிறார்.

வேலூர் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் கட்சியும் இரண்டு பெரிய கட்சிகளுக்கு இணையாக தங்களுக்கான பிரச்சார யுக்தியுடன் வாக்கு சேகரித்து வருகின்றனர். வேட்பாளர் தீப லட்சுமிக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியின் வெற்றிக்காக அதிமுகவும் திமுகவும் கடுமையாக போராடி வருகின்றனர். இரண்டு தரப்புமே பணத்தை தண்ணீராக செலவழித்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர். பணப் பட்டுவாடா புகாரால் நிறுத்தப்பட்ட வேலூர் தேர்தலில் மீண்டும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா தொடங்கியிருப்பது நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x