Published : 01 Aug 2019 07:28 AM
Last Updated : 01 Aug 2019 07:28 AM

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு; நாடு முழுவதும் 3.50 லட்சம் பட்டதாரிகள் தேர்ச்சி

சென்னை

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் மூன்றரை லட்சம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இணையதளங்களில்...

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு (சிடெட்) ஜூலை 7-ம் தேதி நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,942 மையங்களில் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வை (தாள்-1) 13 லட்சத்து 59 ஆயிரத்து 478 பேர் எழு தினர். பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை (தாள்-2) 10 லட்சத்து 17 ஆயிரத்து 553 பேர் எழு தினர். தேர்வு முடிவுகள் பின்வரும் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன.

www.ctet.nic.in

www.cbse.nic.in

முதல் தாளில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 658 பேரும் 2-வது தாளில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 172 பேரும் ஆக மொத்தம் 3 லட்சத்து 51 ஆயிரத்து 830 பேரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்ச்சி சான்றிதழ் டிஜிலாக்கரில் (Digilocker) பதிவேற்றம் செய்யப் படும். அதிலிருந்து சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான லாக்-இன், பாஸ்வேர்டு விவரங்கள் தேர்வர்களின் செல்போன் எண்ணுக்கு எம்எஸ்எஸ் வாயிலாக தெரிவிக்கப்படும்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சி-டெட் தகுதித்தேர்வின் முடிவு கள் தேர்வு முடிந்த 23 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சிக் கான குறைந்தபட்ச மதிப்பெண் பொதுப்பிரிவினருக்கு 90. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (எஸ்சி, எஸ்டி, ஓபிசி) 82 மதிப் பெண் ஆகும். இத்தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது. சிபிஎஸ்இ பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர சிடெட் தேர்ச்சி கட்டாயம் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x