Published : 31 Jul 2019 12:29 PM
Last Updated : 31 Jul 2019 12:29 PM

40 ஆண்டுகால பள்ளங்களால் வைகை நீர்மட்டம் உயர்வதில் தாமதம்: தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை அறிக்கை

வைகை அணையில் 40 ஆண் டுகளாக பள்ளங்கள் காணப் படுவதால் பெரியாறு அணை தண்ணீர் இந்தப் பள்ளங்களை நிரப்புவதால் அணையின் நீர்மட்டம் உயருவதில் தாமதம் ஏற்படுவதாக பொதுப்பணித்துறை அறிக்கை அனுப்பி உள்ளது.

மதுரை மாநகராட்சி மற்றும் தேனி மாவட்ட குடிநீர்த் தேவைக் காக, வைகை அணைக்கு கடந்த 5 மாதங்களுக்குப் பின் பெரியாறு அணையில் இருந்து கடந்த 23-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடப் படுகிறது. பெரியாறு அணைக்கு தற்போது 300 கன அடி நீர் வரு கிறது.

இதில், 100 கன அடி தேனி மாவட்ட குடிநீர்த் தேவைக்காக வைகை அணைக்கு முன்பாகவே எடுக்கப்படுகிறது. இடையில் தண்ணீர் ஆவியாதல் போன்ற காரணங்களால் 70 கன அடி வரை மாயமாகிறது. அதனால், வைகை அணைக்கு 129 கன அடி தண்ணீரே வந்து கொண்டிருக்கிறது. இந்தத் தண்ணீர் முழுமையாக வந்தும், வைகை அணை நீர்மட்டம் உயர் வது தாமதமாகிறது.

பெரியாறு அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் அரசியல் பின்னணியுடன் திருடப்படுவதாலே அணைக்கு முழுமையாக தண்ணீர் வரவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். இதற்கு, தமிழக அரசு, பொதுப்பணித்துறை அதிகா ரிகளிடம் விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு அதிகாரிகள் விரிவான அறிக்கை தயார் செய்து அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பெரியாறு அணையின் நீர் மட்டம் தற்போது 114 அடி உள்ளது. அணைக்கு வெறும் 205 கன அடி தண்ணீரே வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை ஏமாற்றி விட்டது. அதனால், பெரியாறு அணை நீர்மட்டம் இந்த சீசனில் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. ஆனாலும் மதுரை மாநகராட்சி, தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு 129 கன அடி தண்ணீர் வந்தும் நீர்மட்டம் விரை வாக உயரவில்லை. அதற்காக பெரியாறு அணைக்கும், வைகை அணைக்கும் இடையில் தண்ணீர் திருடப்படுவதாக குற்றம் சாட்டு கின்றனர். வைகை அணையில் 40 ஆண்டுகளாக பெரிய பெரிய பள்ளங்கள் உள்ளன. பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்குள் நுழையும் தண்ணீர், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி களில் உள்ள பள்ளங்களை நிரப்பிய பிறகே நீர்மட்டம் உயரும்.

இந்தப் பள்ளங்களில் தண்ணீர் நிரம்புவதற்கு தாமதம் ஏற்படுவதால் அணை நீர்மட்டம் விரைவாக உயரவில்லை. மாதந்தோறும் பொதுப்பணித்துறை, மின்வாரியத் துறை, மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டாகச் சென்று தண்ணீர் திருட்டைக் கண்காணிக்கின்றனர். சில இடங்களில் சிறு விவசாயிகள் தண்ணீரைத் திருடினர். தற்போது தொடர்ச்சியான ஆய்வில் தண்ணீர் திருட்டு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. அதனால், வழித்தடத்தில் ஆவியாதல் போக மீதமுள்ள தண்ணீர் வைகை அணைக்கு முழுமையாக வரு கிறது.

அணையில் காணப்படும் பள் ளங்களாலே அணை நீர்மட்டம் விரைவாக உயரவில்லை என்று தமிழக அரசுக்கு அறிக்கை அனு ப்பி உள்ளோம், என்று கூறினார்.

- ஒய்.ஆண்டனி செல்வராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x