Published : 30 Jul 2019 11:16 AM
Last Updated : 30 Jul 2019 11:16 AM

திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

வேலூர் 

திமுக ஆட்சிக்கு வந்ததும் நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதி களையும் நிறைவேற்றுவோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு ஆதர வாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு உட் பட்ட பலவன்சாத்துகுப்பம், விருபாட்சிபுரம் உள்ளிட்ட பகுதி களில் நடந்து சென்ற பொதுமக்களி டம் வாக்கு சேகரித்தார். அவரு டன், வேட்பாளர் கதிர் ஆனந்த், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பென்னாத்தூர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுமக்கள் சந்திப்பின்போது பெண்களின் கோரிக்கையை ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அப்போது அவர் பேசும்போது, ‘வேலூருக்கு கொண்டுவந்த குடிநீர் திட்டத்தை இந்த ஆட்சி செயல் படுத்தவில்லை. அதை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுப் போம். தொழிற்பேட்டை அமைத்து பெண்களுக்கு வேலை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

100 நாள் வேலை திட்டத்தில் 5 நாள்தான் கொடுக்கின்றனர். அதையும் இந்த ஆட்சியில் கொடுக்கவில்லை. திமுக ஆட் சிக்கு வந்ததும் வேலை கொடுப் போம்’ என்றார்.

இதேபோன்று சித்தேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பெண் களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்த அவர் பின்னர் பேசும் போது, ‘அதிமுக ஆட்சியில் கேபிள் கட்டணம் 300 ரூபாய் ஆக்கிவிட்டனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தோம். மாநிலத்தில் நடந்த இடைத்தேர்த லில் ஒருசில இடங்களில் வெற்றி பெறாததால் ஆட்சிக்கு வர முடிய வில்லை. திமுக ஆட்சிக்கு வந்த தும் நாங்கள் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்று வதுடன் கேபிள் டிவி கட்டணமும் குறைக்கப்படும்.

குடிநீர் திட்டம் நிறைவேற்றுவோம்

பொதுப்பணித் துறை அமைச்ச ராக இருந்த துரைமுருகனும் நானும் வேலூர் மாவட்டத்துக்கு குடிநீர் திட்டத்தை இணைந்து செயல் படுத்தினோம். எல்லா பகுதிக்கும் அந்த திட்டம் வரவில்லை. காரணம், திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை. அதிமுக அந்த திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் தண்ணீர் பிரச்சினை இருந்திருக்காது.

அரசியல் காரணங்களுக்காக நிறுத்திsவிட்டனர். நாங்கள் ஆட் சிக்கு வந்தால் முதல் வேலை யாக அந்தத் திட்டத்தை நிறை வேற்றுவோம். தமிழகத்தில் உள் ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. இதனால்தான் இவ்வளவு பிரச் சினை’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x