Published : 28 Jul 2019 12:20 PM
Last Updated : 28 Jul 2019 12:20 PM

திருப்பூர் மாவட்டத்தில் 7 தனிப்படை போலீஸார் சோதனை: லாட்டரி- மது விற்றதாக பலர் கைது

திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தனிப்படையினர் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக மது, லாட்டரி, கள் விற்பனை, சூதாடியது என 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சட்டவிரோதமாக நடைபெறும் லாட்டரி மற்றும் மது விற்பனை, சீட்டாட்டம் குறித்து தணிக்கை செய்யப்பட்டது. அவிநாசி, பெருமாநல்லூர், குன்னத்தூர், சேவூர் போலீஸ் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சோதனையில், 7 வெவ்வேறு இடங்களில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட் டிருந்த ராமசாமி (42), கருப்புசாமி (38), ரகுபதி (27), ராமசந்திரன் (46), செல்வகுமார் (23), பவித்ரன் (22), சுரேஷ் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த 150 மது பாட்டில்கள், ரூ. 10,290 பறிமுதல் செய்யப்பட்டது. கேரள லாட்டரி விற்பனை செய்ததாக அபுதாகிர் (51) என்பவர் கைது செய்யப்பட்டு, லாட்டரிச் சீட்டுகள், ரூ. 2320 பறிமுதல் செய்யப்பட்டு ள்ளது.

பல்லடம், காமநாயக்கன் பாளையம் மங்கலம் மற்றும் அவிநாசிபாளையம் போலீஸ் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சோதனையில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வெங்கடேஷ் (25), மணிகண்டன் (25), வெங்கடேஷ் (44), மாரிமுத்து (65), முருகன் (42), ஈஸ்வரமூர்த்தி (42) ஆகியோர் கைது செய்யப்பட்டு, 103 மதுபாட்டில்கள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லாட்டரி விற்பனை செய்ததாக வசந்தகுமார் (33) என்பவரும், காசு வைத்து சூதாடியதாக வலூரப்பன் (37), பிரகாஷ் (36), ராமசாமி (65) ஆகியோரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.3,900 பறிமுதல் செய்யப்பட்டது.

உடுமலையில் சட்டவிரோதமாக மது விற்ற தங்கபாண்டி (58) கைது செய்யப்பட்டு, 16 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லாட்டரி விற்ற அபூபக்கர்சித்திக் (35), செல்வராஜ் (54) ஆகியோர் கைது செய்யப்பட்டு, லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தாராபுரம், அலங்கியம், குண்டடம் மற்றும் மூலனூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற கிருஷ்ணன் (19), விஜயகுமார் (42), செல்வம் (38) வடிவேல் (39), கஸ்தூரி (43) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 172 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கள் விற்றதாக கதிர்வேல் (43) என்பவர் கைது செய்யப்பட்டு, 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்ட செல்வகுமார் (41), பிரிஸில் (27), அரவிந்த் (28), சந்திரசேகர் (36), ராமலிங்கம் (40), பழனிசாமி (35), தங்கபாண்டி (30), பிரகாஷ் (37) ஆகியோர் கைது செய்யப்பட்டு, ரூ. 16250 கைப்பற்றப்பட்டது.

ஊத்துக்குளி, வெள்ளகோவில், ஊதியூர் காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த அய்யல்ராஜ் (41), கணபதி (30), பால்ராஜ் (23), நல்லமுத்து (60) ஆகியோர் கைது செய்யப்பட்டு, 85 மதுபாட்டில்கள், 2 லிட்டர் கள், ரூ.540 பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த 24 முதல் 26-ம் தேதி வரை தனிப்படையினர் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 23, லாட்டரி விற்பனை செய்ததாக 4, சூதாடிய 39 பேர் என மொத்தம் 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 498 மதுபாட்டில்கள், 7 லிட்டர் கள், கேரள லாட்டரி சீட்டுகள், ரூ.34880 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x