Published : 21 Jul 2019 07:12 AM
Last Updated : 21 Jul 2019 07:12 AM

மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு; வருவாய் தனியார் வசம் செல்லும் என மாநில அரசுகள் குற்றச்சாட்டு 

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை

மாநில உரிமைகளும், வருவாயும் தனியார் வசம் செல்லும் வகையில் மாற்றப்பட்டுள்ளதாக கூறி மத்திய மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் சாலை விபத்துகளில் சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழக் கிறார்கள். 30 சதவீதம் போலி ஓட்டு நர் உரிமங்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, சாலை விபத்துக்களை குறைப்ப தோடு, ஓட்டுநர் உரிமம் வழங்கு வதை முறைப்படுத்துதல் உட்பட பல்வேறு அம்சங்களுடன் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. இந்த சட்டத்திருத்தம் மூலம் படிப் படியாக சாலை விபத்துக்களை குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த சட்டத்தின் பரிந்துரைப்படி அபராத கட்டணங்கள் தற்போது உள்ளதைக் காட்டிலும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. குடி போதையில் வாகனம் ஓட்டுபவர் களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், 2வது முறை என்றால் ரூ.15 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை, ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம், 2-வது முறையும் இதே தவறைச் செய்தால் 3 மாதங் களுக்கு ஓட்டுநர் உரிமம் சஸ் பெண்ட் என பல்வேறு விதி மீறல் களுக்கு அபராத தொகை 5 மடங்கு வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்துக்களில் இறந் தால் ரூ.5 லட்சமும், காயமடைந்த வர்களுக்கு ரூ.2.50 லட்சமாகவும் இழப்பீடு வழங்க வழிவகை செய்யப் பட்டுள்ளது. மற்றொரு புறம் இந்த சட்டத்திருத்த மசோதாவில் மாநில அரசின் போக்குவரத்து துறை உரிமைகள், வருவாய் பறிக்கப் பட்டு, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ள தாக தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவில் மாநில அரசுகளின் முக்கிய பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் மாற்றங் கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது மாநில போக்குவரத்து துறை மேற்கொண்டு வரும் பணிகள் தனியார் வசம் அளிக்கப்படுகிறது. பேருந்து உட்பட போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கான உரிமம் வழங்குவது, வாகனங்கள் பதிவு கட்டணம், வாகன வரி உள் ளிட்ட மாநில அரசுகளின் வருவாய் மத்திய அரசுக்கு செல்லும். அதன்பிறகு, மாநில அரசுகளுக்கு வருவாய் பகிர்ந்து அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது கிடைத்து வரும் அளவுக்கு வருவாய் கிடைக் குமா? என மாநில அரசுகள் கேள்வி எழுப்பியுள்ளன. மேலும், வாகனங்களுக்கான உதிரிப் பொருட்கள் தயாரிப்பு, பழுது பார்ப்பு போன்ற பணிகளை அங்கீ கரிக்கப்பட்ட நிறுவனங்களே மேற் கொள்ள வழிவகை செய்யப்பட் டுள்ளது. எனவே, மாநில அரசுகளின் உரிமைகள், அதிகாரங்கள், வரு வாய்களை பறிக்கும் விதிகளை நீக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் கூறும்போது, ‘‘மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவில் உள்ள எந்த பிரிவுகளும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தவில்லை. இதை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம்’’ என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த மசோதா அடுத்த வாரம் மக்களவையில் விவாதத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக சிட்டிசன் கன்சி யூமர் அண்டு சிவில் ஆக்‌ஷன் குரூப் (சிஏஜி) என்ற அமைப்பின் மூத்த ஆய்வாளர் என்.சுமணா கூறும்போது, “சாலை பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் வகை யில் பல்வேறு விதிகள் இந்த சட்டத் திருத்தத்தில் கொண்டுவரப்பட் டுள்ளன.

குறிப்பாக, சாலை விபத்து ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களுக் குள் தரமான மருத்துவ வசதிக்கு ஏற்பாடு, நெடுஞ்சாலைகளில் 30 கி.மீ.க்கு ஆம்புலன்ஸ் வசதி, சாலை விபத்துக்கான உண்மை யான காரணம் கண்டறிய தனி குழு அமைப்பது, 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிவது, சாலை விதிகளை மீறுவோர் மீது அபராதம் அதிகரிப்பு அல்லது சிறைதண்டனை அளிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளன.

சாலைகளை முறையாக வடி வமைக்காத நிறுவனம், பராமரிக் காத நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்வது, சாலை விபத்து நடக்கும் இடங்களில் ஆய்வு செய்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x