Published : 19 Jul 2019 02:48 PM
Last Updated : 19 Jul 2019 02:48 PM

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

2019 -20 கல்வி ஆண்டிற்கான 10, 11 மற்றும் 12- ம் வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 17-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9-ம் தேதி நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 4 ம் தேதி வெளியிடப்படுகின்றன.
11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கி, மார்ச் 26-ம் தேதி முடிவுறுகிறது. தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியிடப்படுகின்றன.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி, மார்ச் 24-ம் தேதி நிறைவு பெறுகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாகவே பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளி கல்வித்துறை முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

10-ம் வகுப்பு அட்டவணை:

தேதி கிழமை பாடம்
17.03.2020 செவ்வாய்க்கிழமை தமிழ் முதல் தாள்
19.03.2020 வியாழக்கிழமை  தமிழ் இரண்டாம் தாள்
21.03.2020  சனிக்கிழமை  விருப்ப மொழிப்பாடம்
27.03.2020 வெள்ளிக்கிழமை ஆங்கிலம் முதல் தாள்
30.03.2020 திங்கள் கிழமை ஆங்கிலம் இரண்டாம் தாள்
02.04.2020 வியாழக்கிழமை கணிதம்
07.04.2020 செவ்வாய்க்கிழமை அறிவியல்
09.04.2020 வியாழக்கிழமை சமூக அறிவியல்

 

12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை:

தேதி கிழமை நேரம் பாடம்
       
02.03.2020   திங்கள்கிழமை காலை மொழிப்பாடம்
05.03.2020 வியாழக்கிழமை காலை ஆங்கிலம்
09.03.2020  திங்கள்கிழமை காலை கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயடிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் அண்ட் ட்ரெஸ் டிசைனிங், ஃபுட் சர்வீஸ் மேனேஜ்மென்ட், அக்ரிகல்சுரல் சயின்ஸ்/நர்சிங், நர்சிங்-வொகேஷனல்
12.03.2020 வியாழக்கிழமை காலை கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்/ எதிக்ஸ் அண்ட் இண்டியன் கல்ச்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ்/ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்/ பயோ-கெமிஸ்ட்ரி/அட்வான்ஸ்ட் லேங்குவேஜ் (தமிழ்), ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளியியல்
16.03.2020  திங்கள்கிழமை காலை பிசிக்ஸ்,எகனாமிக்ஸ்,கம்ப்யூட்டர் டெக்னாலஜி
20.03.2020  வெள்ளிக்கிழமை காலை உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், புள்ளியியல், பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆடோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆடை தொழில்நுட்பம்,அலுவலக மேலாண்மை மற்றும் செக்ரடரிஷிப்
24.03.2020   வியாழக்கிழமை காலை வேதியியல், கணக்கு பதிவியல், பூகோளம்


மாணவர்கள் தேர்வுகளை மன அழுத்தமின்றி எதிர்கொள்ளவு, ஆசிரியர்கள் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வதற்கு ஏதுவாகவுமே தேர்வு அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x