Published : 17 Jul 2019 10:48 AM
Last Updated : 17 Jul 2019 10:48 AM

உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.268 கோடி நிதி: நெசவாளர்களுக்கு; 10% அகவிலைப்படி - பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை

கூட்டுறவு சங்கங்களில் உறுப் பினர்களாக உள்ள நெசவாளர்களுக்கு அகவிலைப்படி 10% உயர்த்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பேரவையில் நேற்று விதி 110-ன் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பு:

கூட்டுறவு சங்கங்களில் உறுப் பினர்களாக உள்ள நெசவாளர் களுக்கு அகவிலைப்படி 10% உயர்த்தப்படும். இதனால் சுமார் 2 லட்சம் பேர் ஆண்டுக்கு ரூ.14 கோடி பயன் பெறுவார்கள். விலை யில்லா வேட்டி, சேலை திட்டத் தில் விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலியாக சேலைக்கு 43 ரூபாய் 1 காசாகவும் வேட்டி ஒன்றுக்கு ரூ.24 ஆகவும் உயர்த்தப்படும்.

பெடல் தறி நெசவாளர்களுக்கு சேலை ஒன்றுக்கு 90 ரூபாய் 29 காசுகளாகவும் வேட்டி ஒன்றுக்கு 69 ரூபாய் 58 காசுகளாகவும் உயர்த்தப்படும். விலையில்லா சீரு டைக்கான கூலி மீட்டர் ஒன்றுக்கு 12 ரூபாய் 16 காசுகளாக உயர்த் தப்படும். இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 54 ஆயிரம் விசைத்தறி, 10,500 பெடல் தறி கூலித் தொழிலாளர்கள் ரூ. 11 கோடியே 23 லட்சம் அளவுக்கு பயன் பெறுவார்கள்.

தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் வட்டி மானியம் 6 சதவீதமாக உயர்த்தப்படும். இத னால் ஆண்டு செலவினம் ரூ.21 கோடியே 60 லட்சம். வேளாண்மை, தோட்டக்கலைத் துறை மூலம் ரூ. 10 கோடியில் 2.50 கோடி பனை விதைகள் வழங்கப்படும். 100 விதை சேமிப்பு கிடங்குகளுடன், துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ. 40 கோடியில் மேம் படுத்தப்படும்.

சென்னை வண்ணாரப்பேட்டை யில் ரூ.5 கோடியில் ‘தோட்டக்கலை பாரம்பரிய பூங்கா’, ரூ. 6 கோடியில் கரும்பு சாகுபடி இயந்திரங்களுக் கான 10 வாடகை மையங்கள் ஆகியவை நடப்பாண்டில் அமைக் கப்படும். 150 மதிப்பு கூட்டும் மையங்கள் ரூ.15 கோடியிலும் 243 கிராம அளவிலான பண்ணை இயந்திர வாடகை மையங்கள் ரூ.19 கோடியே 44 லட்சத்திலும் அமைக்கப்படும்.

கன்னியாகுமரியில் ரூ.16 கோடியில் தென்னை மதிப்பு கூட்டும் மையம் அமைக்கப்படும். நடப்பாண்டில் ரூ. 12 கோடியில் 20 உழவர் உற்பத்தி நிறுவனங்களில் விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். 90 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 100 உழவர் சந்தைகளில் கூடுதலாக கடைகள், மின்னணு எடை மேடை, கணினி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ரூ.268 கோடியே 62 லட்சத்தில் ஏற்படுத்தப்படும்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவ னங்களுக்கு நபார்டு வங்கியின் நாப்கிசான் உதவியுடன் ரூ.266 கோடி வரை கடன் உதவி அளிக் கப்படும்.மதுரை, சேலம். ஈரோடு, தூத் துக்குடி, காஞ்சிபுரம் மாவட்டங் களில் விளைபொருள்களைப் பாது காக்க சூரிய சக்தியால் இயங்கும் சிறிய அளவிலான குளிர்பதன அலகுகள் ரூ. 100 கோடியில் ஏற்படுத்தப்படும். அழுகும் பொருட் களுக்கான விநியோக தொடர் மேலாண்மைத் திட்டம் சேலம், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட் டங்களில் ரூ.100 கோடியில் விரிவு படுத்தப்படும். நீர் மேலாண்மைப் பணிகளுக்கு மானியம் வழங்க ரூ.116 கோடியே 29 லட்சம் ஒதுக்கப்படும்.

எஸ்சி, எஸ்டி மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் உள்ள தலா 1000 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.20 கோடி வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x