Published : 17 Jul 2019 10:13 AM
Last Updated : 17 Jul 2019 10:13 AM

ஒரு மாதம் பரோலில் வருகிறார்: வேலூர் அரசியல் பிரமுகர் வீட்டில் தங்குகிறார் நளினி

வேலூர் சிறையில் இருந்து ஒரு மாதம் பரோலில் வரும் நளினி, வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசியல் பிரமுகர் வீட்டில் தங்க உள்ளார். மேலும், நளினியின் மகள் ஹரித்ராவின் திருமணமும் சத்துவாச்சாரியில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் பெண்கள் சிறையிலும் இவரது கணவர் முருகன் என்ற கரன் வேலூர் ஆண்கள் சிறை யிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது மகள் ஹரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதால் 6 மாதங்கள் பரோல் வழங்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் நளினி கோரி யிருந்தார். அவரது கோரிக்கை மனுவின் மீது சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம் மனுவின் மீது கடந்த 5-ம் தேதி விசாரணை நடந்தது. அப்போது, நளினி நேரில் ஆஜராகினார். விசாரணையின் முடிவில் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க சிறை நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது. இதற்கிடையில், வேலூர் சிறையில் உள்ள நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்தி கடந்த சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

பின்னர் அவர் தங்க வேண்டிய இடம் மற்றும் இருநபர் ஜாமீன் குறித்த ஆவணங்களையும் சமர்ப் பித்தார். இது தொடர்பாக சிறை நன்னடத்தை அதிகாரிகள், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, நாளை அல்லது நாளை மறுதினம் நளினி பரோலில் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிறை அதிகாரி கள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘நளினிக்கு அவரது தாயார் பத்மா வும், காட்பாடியைச் சேர்ந்த பெண் ஒருவரும் ஜாமீன் வழங்கியுள்ள னர். வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரின் வீட்டில் நளினி தங்க உள் ளார். அவரது வீடு பாதுகாப்பா னதா? என்பதை சிறை நன்னடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதியிடம் அறிக்கை சமர்ப் பித்துள்ளனர். இதன் அடிப்படை யில் நளினியை பரோலில் விடுவிப் பது தொடர்பான உத்தரவு வெளியிடப்படும்.

நளினி வேலூர் சத்துவாச்சாரி யில் தங்குவதால் அவரது மகளின் திருமணம், வீட்டுக்கு அருகே உள்ள ஏதாவது ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது. காவல்துறையின் கட்டுப் பாடு மற்றும் பாதுகாப்புடன் திரு மணம் நடைபெறும். அனுமதியில் லாதவர்கள் யாரும் திருமணத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x