Published : 15 Jul 2019 07:11 AM
Last Updated : 15 Jul 2019 07:11 AM

தாம்பரம், வேளச்சேரி மார்க்கங்களில் 67 மின்சார ரயில் சேவைகள் ரத்து; சிறப்பு ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி

சென்னை 

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், வேளச்சேரி ஆகிய இரு வழித்தடங்களிலும் நேற்று 67 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சிறப்பு ரயில்களும் சீராக இயக்கப்படாததால், பயணி கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

சென்னை கடற்கரை - வேளச்சேரி தடத்திலும், தாம்பரம் தடத்தில் எழும்பூர் - பல்லாவரம் இடையிலும் நேற்று தண்டவாள பராமரிப்பு பணி நடந்தது. இதனால், இந்த 2 தடங்களிலும் மொத்தம் 67 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், கடற்கரை - தாம் பரம் இடையே இரு மார்க்கத்திலும் காலை 11 மணி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடற்கரை - தாம்பரத்துக்கு விரைவு பாதையில் காலை 11 மணி முதல் சிறப்பு ரயில்கள் சீராக இயக்கப்பட்டன. இதனால், பயணி கள் ஓரளவுக்கு நெரிசலில் சிக் காமல் பயணம் செய்ய முடிந்தது.

ஆனால், மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து கடற்க ரைக்கு, அறிவித்தபடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை. காலை 11 மணி முதல் 12 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு மின்சார ரயில்கள் வராததால், பல்லாவரம், மீனம்பாக்கம், கிண்டி, மாம்பலம் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. சீரான ரயில் சேவை கிடைக்காமல், பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து சில பயணிகள் கூறியபோது, ‘‘விரைவுப் பாதை யில் இயக்கத் திட்டமிட்டிருந்த சிறப்பு ரயில்களை, அறிவித்தபடி சீராக இயக்கி இருந்தால் பயணி கள் அவதியின்றி பயணம் செய்திருப்பார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப் பட்டதால், ரயில்கள், ரயில் நிலை யங்களில் கட்டுக்கடங்காத கூட் டம் காணப்பட்டது. இதனால், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுபோன்ற சூழலில், விரைவுப் பாதையில் சீரான ரயில் சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

ரயில்வே அதிகாரிகள் கூறிய தாவது:

பாதுகாப்பான ரயில் பயணத் துக்கு, தண்டவாள பராமரிப்பு மிகவும் அவசியமானதாகும். இதை தவிர்க்க முடியாது. அதனால்தான், ரயில்களின் சேவையை ரத்து செய்து, இப்பணியை மேற் கொண்டு வருகிறோம். பயணிகள் அதிகம் பாதிக்கப்படாத வகை யில், ஒரு பகுதி மட்டும் ரயில்கள் ரத்து, சிறப்பு ரயில்கள் இயக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன’’ என்றனர்.

கடற்கரையில் இருந்து தாம்பரம், வேளச்சேரி ஆகிய இரு தடங்களிலும் மதியம் 3 மணிக்குப் பிறகு மின்சார ரயில் கள் வழக்கம்போல இயங்கத் தொடங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x