Published : 05 Jul 2015 11:18 AM
Last Updated : 05 Jul 2015 11:18 AM

நீதிமன்றங்களில் ஆஜராக வரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி செய்து தர உத்தரவு

விசாரணை நீதிமன்றங்களில் ஆஜராக வரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சி சொல்ல வருவோர் அமர்வதற்கு இருக்கை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த ஜெய்கணேஷ் தாக்கல் செய்த மனுவில், “விசாரணை நீதிமன்றங்களில் ஆஜராக வரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சி சொல்ல வருவோர் அனைவரும் நீண்ட நேரம் நிற்கும் நிலைதான் உள்ளது. அதனால் அவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவதால், நீதிமன்றங்கள் உள்ளிட்ட முறையீடு செய்யும் இடங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமர்வதற்கு வசதி செய்து தர உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற முதல் அமர்வு, “உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, அனைவரும் சமமான வாய்ப்பு தரப்பட வேண்டும். எனவே, குற்ற வழக்குகளை விசாரிக்கும் அனைத்து நீதிமன்றங்களில் ஆஜராகவரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்க உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x