Published : 29 Jul 2015 08:41 AM
Last Updated : 29 Jul 2015 08:41 AM

கல்பாக்கம் கடலில் ரோந்து பணிக்காக தனியார் படகு தளத்தை பயன்படுத்த திட்டம்: அரசு அனுமதிக்காக காத்திருப்பு

கல்பாக்கம் கடல் பகுதியில் ரோந்து பணிகளுக்காக தனியார் படகு தளங்களை பயன்படுத்த கட லோர பாதுகாப்பு குழுமம் திட்ட மிட்டுள்ளது.

கடலோரப் பகுதியில் கல்பாக் கம் அணுமின் நிலையம் மற்றும் மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. கல்பாக்கம் அணு மின் நிலையத்துக்கு கடல் மார்க்கமாக தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் கடலில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த கல் பாக்கம் கடல் பகுதியில் ரோந்து படகுத் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இங் குள்ள கடல் பகுதி பாறைகள் நிறைந்து காணப்படுவதால் படகு தளம் அமைப்பதில் சிக்கல் உள்ளதாக தொழில்நுட்ப குழு வினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கோவளம் மற்றும் புதுப்பட்டினம் இடையே தனியார் நிறுவனம் ஒன்று சுற்றுலாவுக்காக படகு தளம் அமைத்துள்ளது. இங்கு படகுகளை நிறுத்தி ரோந்து பணியில் ஈடுபட கடலோர பாதுகாப்பு குழுமம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அந்த வட்டாரங்கள் கூறியதாவது: கல்பாக்கம் அடுத்த பட்டிபுலம் பகுதியில் தனி யார் நிறுவனம் ஒன்று சுற்றுலா வுக்காக நவீன தொழில் நுட்பங் களைக் கொண்டு சிறிய படகு தளம் அமைக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.

அந்த நிறுவனத்தின் அனுமதியோடு கல்பாக்கம் பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபடும் படகுகளை அங்கு நிறுத்தி பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. அனுமதி கிடைத்த வுடன் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், கல்பாக்கம், முதலியார் குப்பம், கோவளம், புதுப்பட்டணம் ஆகிய கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு பணி களில் ஈடுபடுவதற்காக, ஊர்காவல் படை மூலம் 35 வீரர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x