

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ‘இசிஐநெட் நெட் செயலியில் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் அப்டேட் நெட்’ செல்போன் செயலியில் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் துல்லியமாக ‘அப்டேட்’ செய்யப்படுவதால் பயனுள்ளதாக இருப்பதாக வாக்காளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்து, திங்கட்கிழமை (மே 4) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகளை, ‘இசிஐநெட் ’ செல்போன் செயலி வாயிலாக உடனுக்குடன் பொதுமக்களுக்கு தெரிவிக்க, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, இன்று காலை 8.30 மணி முதல் மாநில வாரியாக, தொகுதிகள் வாரியாக, உடனுக்குடன் யார் முன்னணி, வேட்பாளர்கள் புகைப்படத்துடன் பெற்ற வாக்குகள் உட்பட தேர்தல் முடிவுகள் தொடர்பான நிலவரங்கள் உடனுக்குடன் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் இருக்கும் இடத்தில் இருந்தே துல்லியமாக தேர்தல் முடிவுகளை அறிய முடிவதால் வாக்காளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.