ரூ.90 கோடியில் 5 புதிய அரசு ஐடிஐ-க்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு

ரூ.90 கோடியில் 5 புதிய அரசு ஐடிஐ-க்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: ரூ.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக 5 அரசு ஐடிஐ-க்கள் தொடங்கப்படும் என பட் ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் பெறுவதை சாத்தியப்படுத்தும் வகையில் ஐடிஐ-க்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழிக் கற்றல் (ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங்) என்ற புதிய தொழிற்பிரிவு ரூ.10 கோடியில் தொடங்கப்படும்.

இத்தொழிற்பிரிவு ஆண்டுக்கு 10 ஐடிஐ-க்கள் வீதம் 5 ஆண்டுகளில் 50 ஐடிஐ-க்களில் அறிமுகப்படுத்தப் படும். இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 24 ஆயிரம் மாணவர்கள் ஏஐ தொழி்ல்நுட்பத்தில் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெறுவர். மேலும், ரூ.90 கோடி செலவில் புதிதாக 5 அரசு ஐடிஐ-க்கள் தொடங் கப்படும்.

ரூ.90 கோடியில் 5 புதிய அரசு ஐடிஐ-க்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு
அண்ணன் சீர் முதல் ‘வெற்றி’ திட்டங்கள் வரை: தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in