Last Updated : 13 Jul, 2015 09:24 AM

 

Published : 13 Jul 2015 09:24 AM
Last Updated : 13 Jul 2015 09:24 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்து நடத்த 1,000 பேர் முன்பதிவு: ரூ.100 கோடி வசூல் எதிர்பார்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு மொய் விருந்து விழா நடத்த 1,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.100 கோடி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ள வடகாடு, கொத்தமங்கலம், கீரமங் கலம், மாங்காடு, புள்ளான்விடுதி, கீழாத்தூர், குளமங்கலம், சேந்தன்குடி, நெடுவாசல், அணவயல், நகரம், செரியலூர், ஆயிங்குடி, அரசர்குளம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளாக ஆடி மாதத்தில் மொய் விருந்து விழா நடத்தப் படுவது வழக்கம். தொடக் கத்தில் திருமணம், காதணி விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது சிறு தொகையை மொய்யாக எழுதினர். அது தற்போது மொய் விருந்து விழாவாக வளர்ந்துள்ளது.

நடப்பாண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாட்டில் 18 இடங்களிலும், கொத்தமங்கலத்தில் 13, கீரமங்கலத்தில் 15, மாங் காட்டில் 10, கீழாத்தூரில் 5, புள்ளான்விடுதியில் 6, அணவயலில் 10 என சுமார் 80 இடங்களில் மொய் விருந்து நடத்த ஏறத்தாழ 1,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். மொத்தம் ரூ.100 கோடிக்கு மொய் விருந்து வசூலாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

ஒருநாள் விழாவுக்கு சுமார் 10,000 அழைப்பிதழ்கள் விநியோகிக் கப்படுகின்றன. ஊரெங்கும் பேனர் வைத்துள்ளனர். வழக்கத்தைக் காட்டிலும் நடப்பாண்டில் ஒரு வாரம் முன்னதாகவே விழா தொடங் கியுள்ளதால், மொய் விருந்து நடக்கும் கிராமங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

இதுகுறித்து விழா ஒருங் கிணைப்பாளர் வடகாடு தமிழரசன் கூறும்போது, “சில ஆண்டுகளுக்கு முன் அதிகபட்சமாக 5 பேர் சேர்ந்து விழாவை நடத்தினர். தற்போது, விலைவாசி கடுமை யாக உயர்ந்துள்ளதால் 15 பேர் வரை சேர்ந்து விழா நடத்து கின்றனர். சாதாரணமாக ஒரு விழாவுக்கு அரை டன் ஆட்டுக்கறி தேவைப்படும். சுமார் ரூ.5 லட்சம் செலவாகும். அந்த விழாவில் ரூ.1.5 கோடி மொய் வசூலாகும். இதில், அரசியல், சாதி, மதம் என்ற வேறுபாடுகள் பார்ப்பதில்லை. சிலர் ரூ.2.5 கோடி வரை வசூல் செய்துள்ளனர்.

மொய் தொகையை உரிய முறையில் பயன்படுத்தி வளர்ந்த வர்களும் உண்டு. ஊதாரித்தனமாக செலவிட்டவர்களும் உள்ளனர். நடப்பாண்டு சுமார் 1,000 பேர் விழா நடத்த முன்பதிவு செய்துள்ளனர். ஆடியில் தொடங்க வேண்டிய விழா, ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியுள்ளது” என்றார்.

மது விற்பனை அதிகரிக்கும்

விழா நடைபெறும் கிராமங் களில் உள்ள 20 டாஸ்மாக் மதுக் கடைகளிலும், வழக்கமான விற்பனையைவிட மொய் விருந்து நாட்களில் 3 மடங்கு விற்பனை அதிகரிக்கும்.

கடந்த சில நாட்களாக கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளிடம், ஆடி மாதத்தில் விற்பனையை உயர்த்திக் காட்டு வதாக பணியாளர்கள் உத்தர வாதம் அளித்துள்ளதாகக் கூறப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x