Published : 11 Jul 2015 12:50 PM
Last Updated : 11 Jul 2015 12:50 PM

ஜூலை 15-ல் 7 ரயில்கள் ரத்து

இட்டார்சி தீ விபத்து காரணமாக ஜுலை 14, ஜூலை 15 தேதிகளில் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

மதுரையில் இருந்து நிஜாமுதீன் புறப்படும் சம்பர்க் கிராந்தி ரயில் வரும் 14ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. பெங்களூரு - பாட்னா, திருவனந்தபுரம் - நிஜாமுதீன் ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை - டெல்லி, டெல்லி - சென்னை கிரான்ட் டிரங்க் ரயில்கள் வரும் 15ஆம் தேதி ரத்து செய்யப்படுகின்றன.

மதுரை - டேராடூன், புதுச்சேரி - டெல்லி விரைவு ரயில், நிஜாமுதீன் - கோவை கொங்கு ரயில், சென்னை - ஜம்மு தாவி அந்தமான் ரயில். பாட்னா - பெங்களூரு சங்கமித்ரா ரயில் ஆகியவை ஜூலை 15ம் தேதி ரத்து செய்யப்படுகின்றன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x