Last Updated : 15 Jul, 2015 08:00 AM

 

Published : 15 Jul 2015 08:00 AM
Last Updated : 15 Jul 2015 08:00 AM

பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி ரயில் டிக்கெட்: முன்பதிவு இணையத்தை முடக்கிய ஏஜென்ட்கள் - சிபிஐ விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

பொதுமக்கள் பயன்படுத்த முடி யாதபடி ரயில் டிக்கெட் முன்பதிவு இணையதளத்தை முடக்கி, ஏஜென்ட்கள் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்த அதிர்ச்சித் தகவல் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் ஏஜென்ட்கள் முறைகேடு செய்திருப் பதாக கிடைத்த தகவலின்பேரில் டெல்லி, பெங்களூரு, சென்னை உட்பட பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து பலரை கைது செய்தனர். அவர்க ளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல புதிய தகவல்கள் கிடைத் துள்ளன. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

ஏஜென்ட்கள் அதிக அளவில் மோசடியில் ஈடுபட்டது 'தட்கல்' முன்பதிவில்தான். தட்கல் நேரம் இப்போது மாற்றியமைக் கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் தட்கல் டிக்கெட் முன் பதிவு செய்துகொள்ளலாம். இந்த நேரத்தில் ஐஆர்சிடிசி-யின் ரயில் டிக்கெட் முன்பதிவு இணையதளம் முழுவதையும் ஏஜென்ட்கள் தங்களது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். அதாவது இணைய தளத்தின் சர்வருக்குள் புகுந்து பொதுமக்கள் யாரும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதபடி செய்துவிடுவார்கள். ஏஜென்ட்கள் தங்களுக்கு தேவை யான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பின்னர் தான் இணையதளத்தை விடுவிப் பார்கள். ஏஜென்ட்கள் முன்பதிவு செய்த பின்னர்தான் பொதுமக்கள் ஐஆர்சிடிசி இணையதளத்துக்குள் நுழைய முடியும். ஏஜென்ட்கள் மிச்சம் வைக்கும் டிக்கெட்டுகள் மட்டும்தான் பொதுமக்களுக்கு கிடைக்கும்.

ஐஆர்சிடிசி அதிகாரிகள் உதவி

இப்படி மோசடியாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இணைய தள முன்பதிவு நிர்வாகத்தை கவனிக்கும் ஐஆர்சிடிசி அதி காரிகள் சிலர் ஏஜென்ட்களுக்கு உதவி செய்துள்ளனர். ரயில்வே இணையதள சர்வருக்குள் நுழை வதற்கு வசதியாக, அதற் கான கணினி ரகசிய குறியீடு களை ஐஆர்சிடிசி அதிகாரி கள் ஏஜென்ட்களுக்கு கொடுத்துள் ளனர். ரகசிய கணினி குறியீடுகளை பெற்றுள்ள ஏஜென்ட்கள் நாடு முழுவதும் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்கள் கேட் பதற்கு ஏற்ப அனைத்து இடங் களுக்கும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுப்பார்கள். இதற்காக கணினியில் நிபுணத்து வம் பெற்ற சிலரை ஏஜென்ட்கள் பணியில் வைத்துள்ளனர்.

இப்படி மோசடியாக முன் பதிவு செய்யப்படும் தட்கல் டிக்கெட்டுகளை ரூ.200 முதல் ரூ.2000 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்துள்ளனர். ரயில்வே இணையதளத்துக்குள் ஏஜென்ட்கள் நுழைந்ததற்கான ஆதாரங்களையும் கணினி தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு நடத்தி சேகரித்து வைத்தி ருக்கிறோம். இந்த வழக்கில் மேலும் பலர் விரைவில் கைதாவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x