4,724 தற்காலிக செவிலியர் பணிக்கு 49 ஆயிரம் பேர் விண்ணப்பம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: அரசு மருத்​து​வ​மனை​களில் தற்​காலிக முறையி​லான 4,724 பணி​யிடங்​களுக்கு 49 ஆயிரம் செவிலியர்​கள் விண்​னப்​பித்​தனர். தகு​தி​யானவர்​கள் தேர்வு செய்​யப்​பட்டு பணி ஆணை வழங்​கப்​பட்டு வரு​கிறது.

தமிழகத்​தில் அரசு மருத்​து​வ​மனை​களில் நோயாளி​களின் எண்​ணிக்கை பல மடங்கு அதி​கரித்​துள்​ள​தால், செவிலியர்​கள் பற்​றாக்​குறை நிலவி வரு​கிறது. அதனால், தேசிய நலவாழ்வு குழு​மத்​தின் கீழ் 11 மாத தற்​காலிக அடிப்​படை​யில் ஒப்​பந்த முறை​யில் 4,724 செவிலியர்​கள் நியமிக்​கப்பட உள்​ளனர். மாதம் ரூ.21 ஆயிரம் சம்​பளம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. மாவட்ட சுகா​தார நலவாழ்வுச் சங்​கம் மூல​மாக நிரப்​பப்​படும் இந்த பணி​யிடங்​களுக்கு தமிழகம் முழு​வதும் 49 செவிலியர்​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக சுகா​தா​ரத் துறை அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “செ​விலியர்​கள் தற்​காலிக முறை நியமனத்​துக்​கு, சில செவிலியர்​கள் சங்​கங்​கள் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. அதே​நேரம், பணி​யில் சேர பலர் விருப்​பம் தெரி​வித்து 49 ஆயிரம் பேர் விண்​ணப்​பித்​துள்​ளனர். தகு​தி​யானவர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டு, மாவட்ட சுகா​தார நலவாழ்வுச் சங்​கம் மூல​மாக பணி ஒதுக்​கீட்டு ஆணைகள் வழங்​கப்​பட்​டு வரு​கின்றன” என்​றனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
வெற்றிப் பயணம் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள்: பயணச்சீட்டில் ஏறும், இறங்கும் இடம் விவரங்களை பதிவிட வேண்டும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in