வெற்றிப் பயணம் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள்: பயணச்சீட்டில் ஏறும், இறங்கும் இடம் விவரங்களை பதிவிட வேண்டும்

தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டது
வெற்றிப் பயணம் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள்: பயணச்சீட்டில் ஏறும், இறங்கும் இடம் விவரங்களை பதிவிட வேண்டும்
Updated on: 
1 min read

சென்னை: வெற்​றிப் பயணம் திட்​டத்​தில் பயணச்​சீட்​டில் பயணி ஏறும், இறங்​கும் இடம் விவரங்களை பதி​விட போக்​கு​வரத்து துறை அறிவுறுத்தியுள்​ளது.

வெற்​றிப் பயணம் திட்​டம் அக்​.2-ம் தேதி தொடங்​கப்பட்​டது. இத்​திட்​டத்​தின் கீழ் மாநகர்,நகர்ப்​புற சாதா​ரண, எக்​ஸ் பிரஸ், எல்​எஸ்​எஸ், டீலக்ஸ், புறநகர், மலைப்பகுதி சாதாரண பேருந்​துகளில் மகளிர்,சிறுமியர் மற்றும் திருநர் பயணி​கள் கட்​ட​ணமின்றி பயணம் செய்​ய​லாம். இதனிடையே திட்டத்தை செயல்​படுத்​து​வது தொடர்​பாகவழி​காட்டு நெறி​முறை​களை போக்​கு​வரத்து துறை வெளி​யிட்​டுள்​ளது.

அதன்​படி, வெற்​றிப் பயணம் திட்​டத்​தில் இடம்​பெறும் வழித்​தடங்​களின் விவரங்​கள் புதுப்​பிக்​கப் பட்​டு, ஒவ்​வொரு தகு​தி​யான சேவை​யும் மின்​னணுபயணச்​சீட்டு இயந்​திரமென்​பொருள் அமைப்​பில் சரி​யாக இணைக்​கப்பட வேண்​டும். பூஜ்ஜி​யம் பயணச்​சீட்டு (ZERO Ticket) உரு​வாக்​கம் முன்​கூட்​டியே சோதித்து உறுதிசெய்ய வேண்​டும்.

டிஜிட்​டல் வழித்தட பலகை உள்ள பேருந்​துகளில் “வெற்​றிப் பயணம்” தெளி​வாகக் காட்​சிப்​படுத்​தப்பட வேண்​டும். டிஜிட்​டல் வழித்தட பலகை இல்​லாத பேருந்​துகளில் அங்​கீகரிக்​கப்​பட்ட “வெற்​றிப் பயணம்” ஸ்டிக்​கர் மட்​டும் ஒட்​டப்பட வேண்​டும். மகளிர் மற்​றும் திருநர் பயணி​களிட​மிருந்து எந்​தக் கட்​ட​ண​மும் வசூலிக்​கக்கூடாது. ஒவ்​வொரு தகு​தியான பயணத்​துக்​கும் பூஜ்ஜி​யம் பயணச்​சீட்டு கட்​டாய​மாக வழங்​கப்பட வேண்​டும். பயணச்​சீட்டு வழங்​காமல் விடு​தல் அல்​லது தவறாகப் பயன்​படுத்​தி​னால் விதி​களின்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும்.

நகர சாதாரன சேவை​களில் தற்​போது நடை​முறை​யில் உள்ள பயணச்​சீட்டு நடை​முறை மாற்​றமின்றி தொடர வேண்​டும். எக்​ஸ்​பிரஸ், எல்​எஸ்​எஸ், டீலக்​ஸ், மலைப்​பகுதி மற்​றும் புறநகர் சாதாரண பேருந்​துகளில் பயணச்​சீட்​டில் பயணி ஏறும் மற்​றும் இறங்​கும் இடம் விவரங்​கள் கட்​டாயமாகப் பதிவு செய்ய வேண்​டும். மின்​னணு கருவி செயலிழந்தால், அச்சிட்ட பயணச்சீட்டு வழங்க வேண்டும்.

தேவையான கட்டண விவரம், பயணி​களின் எண்​ணிக்​கை, தடம்எண் மற்​றும் தேதி ஆகியவை பயணச்​சீட்டு பதிவேட்டில் முறை​யாகப் பதிவு செய்யவேண்​டும். பரிசோதகர்​கள், சோதனை அலு​வலர்​கள், பேருந்​தில் பயணம் செய்​யும் தகு​தி​யான பயணிகளுக்கு பயணச்​சீட்டு வழங்​கப்​பட்​டுள்ளதா என்​பதை சரி​பார்க்க வேண்​டும். பயணச்​சீட்டு இல்​லாத தகு​தி​யான பயணி​யிடம் அபராதம் வசூலிக்​கக் கூடாது.

மாநிலங்​களுக்கு இடையே செல்​லும் சாதாரணப் பேருந்​துகளில் தமிழகத்​துக்​குள் இருந்​தால் மட்​டுமே பூஜ்ஜி​யம் பயணச்​சீட்டு வழங்க வேண்​டும். ஏறும் இடம் அல்​லது இறங்​கும் இடம் அண்டை மாநிலம், யூனியன் பிரதேசத்​தில் இருந்​தால் நடை​முறை​யிலுள்ள பயணச்​சீட்டு வழங்க வேண்​டும். வழித்​தடம் இடை​யில் அண்டை மாநிலம், யூனியன் பிரதேசம் வழி​யாகச் சென்​றால் சலுகை தொடரும்.

இதற்​கேற்ப மின்​னணு கருவி யில் வசதி ஏற்​படுத்த வேண்டும். முக்​கிய பேருந்து நிலை​யங்​கள், கல்வி நிறு​வனங்​கள், தொழிற்​பகு​தி​கள், மருத்​து​வ​மனை​கள் மற்​றும் சந்​தைப் பகு​தி​களில் கள கண்​காணிப்பு மேற்​கொள்​ள வேண்​டும். நெரிசல், நீண்ட காத்திருப்​பு, தாமதம், சேவை குறை​பாடு​கள் இருந்தால் திருத்த நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும்​ என தெரி​வித்​துள்​ளது.

வெற்றிப் பயணம் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள்: பயணச்சீட்டில் ஏறும், இறங்கும் இடம் விவரங்களை பதிவிட வேண்டும்
“என்னுடைய பதிவு ஆதங்கத்தின் வெளிப்பாடு; தவெகவில் இருந்து விலகவில்லை” - நாஞ்சில் சம்பத் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in