Published : 01 Jul 2015 08:16 AM
Last Updated : 01 Jul 2015 08:16 AM

பெட்ரோல் விலை 31 பைசா; டீசல் 71 பைசா குறைந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 பைசாவும் டீசல் விலை லிட்டருக்கு 71 பைசாவும் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளி ரவுமுதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை சரிந்திருப்பதால் பெட் ரோல் விலை லிட்டருக்கு 31 பைசாவும் டீசல் விலை லிட்டருக்கு 71 பைசாவும் குறைக்கப்பட்டிருப்பதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நேற்றிரவு அறிவித்தது. அந்தந்த மாநிலங்களின் வரி விதிப்புக்கு ஏற்ப விலையில் மாற்றம் இருக்கும்.

சென்னையில் ரூ.70.12 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலைகுறைப்புக்குப் பிறகு ரூ.69.84 க்கு விற்கப்படுகிறது. இதேபோல ரூ.54.29 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் ரூ. 53.52 க்கு விற்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x