Published : 21 Jun 2015 01:31 PM
Last Updated : 21 Jun 2015 01:31 PM

எம்எஸ்எம்இ நிறுவனத்தில் சிறுதானிய இயற்கை உணவு தயாரிப்பு பயிற்சி

தினை லட்டு, வரகு பிரியாணி மிக்ஸ் உள்ளிட்ட சிறு தானியங்களைக் கொண்டு இயற்கை உணவு தயாரிப்பது பற்றி கிண்டி எம்எஸ்எம்இ மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக எம்எஸ்எம்இ (குறு சிறு நடுத்தர தொழிலகங்கள்) மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்நிறுவனம் சார்பில் தினை லட்டு, தினை இனிப்பு பனியாரம், தினை தோசை மிக்ஸ், சாமை உப்புமா மிக்ஸ், வரகு புளியோதரை, வரகு பிரி யாணி மிக்ஸ், சிறுதானிய சப்பாத்தி மிக்ஸ், சிறு தானிய சத்துமாவு மிக்ஸ், சிறுதானிய பாயாசம் மிக்ஸ், ராகி பக்கோடா, கம்பு இட்லி, சோள அடை மற்றும் சிறு தானியங்களைக் கொண்டு பிரட், பஃப்ஸ், கேக்ஸ், பன், ரஸ்க் போன்றவற்றை தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி கிண்டியிலுள்ள எம்எஸ்எம்இ வளா கத்தில் ஜூன் 22 முதல் 26-ம் தேதி வரை நடை பெறும். இதில் பங்கேற்க விரும்புவோர் 9940318891 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x