பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு | இடைக்கால பட்ஜெட் 2026

சுகாதாரம், தொழில் துறைகளுக்கு ரூ.26,372 கோடி ஒதுக்கீடு
பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு | இடைக்கால பட்ஜெட் 2026
Updated on
2 min read

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் பள்​ளிக்​கல்​வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக இடைக்​கால பட்​ஜெட்​டில் கூறி​யிருப்​ப​தாவது:

பேராசிரியர் அன்​பழ​கன் பள்ளி மேம்​பாட்​டுத் திட்​டத்​தின்​கீழ் இது​வரை 3,771 வகுப்​பறை​கள், 107 ஆய்​வகங்​கள், 8 விடு​தி​கள் ஆகியவை ரூ.673 கோடி​யில் கட்​டப்​பட்​டு, திறக்​கப்​பட்​டுள்​ளன.

மேலும், ரூ.2,009 கோடி மதிப்​பிலான பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. அதே​போல, கலைஞர் நூற்​றாண்டு நூல​கம் தென்​தமி​ழ​கத்​தின் அறி​வாலய​மாகத் திகழ்​கிறது. கோவை, திருச்​சி, கடலூர், சேலம் மற்​றும் திருநெல்​வேலி மாநகரங்​களில் ரூ.902 கோடி​யில் நவீன நூல​கங்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. இடைக்​கால பட்​ஜெட்​டில் பள்​ளிக்​கல்​வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

உயர்​கல்​வித் துறை​யில் கல்​லூரி மாண​வர்​கள் நலனுக்​காக ரூ.2,172 கோடி​யில் 10 லட்​சம் பேருக்கு மடிக்​கணினிகள் வழங்​கும் திட்​டம் சமீபத்​தில் தொடங்​கப்​பட்​டது. இது​வரை 6 லட்​சத்து 75,888 பேர் பயன்​பெற்​றுள்​ளனர். அண்ணா பல்​கலைக்​கழ​கத்தை ஆசி​யா​வின் முதன்​மைக் கல்வி நிறு​வன​மாக மாற்ற ரூ.1,380 கோடியி​லான திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது. கல்​லூரி​களின் கட்​டமைப்பை மேம்​படுத்த கடந்த 4 ஆண்​டு​களில் ரூ.909 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுத​விர, அரசுப் பள்ளி மாண​வர்​களுக்​கான 7.5 சதவீதம் இடஒதுக்​கீட்​டில் சேர்க்கை பெற்ற 54,301 பேரின் கல்விக் கட்​ட​ணங்​களை அரசே முழு​மை​யாக ஏற்​று, இது​வரை ரூ.1,512 கோடி தரப்​பட்​டுள்​ளது. கடந்த 5 ஆண்​டு​களில் 38 புதிய அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​கள் உரு​வாக்​கப்​பட்​டு, 18,760 மாண​வர்​கள் கூடு​தலாக பயனடைந்து வரு​கின்​ற​னர்.

இதன்​பல​னாக உயர்​கல்வி சேர்க்​கை​யில் 47 சதவீதம் பெற்​று, தேசிய சராசரியை​விட தமி​ழ​கம் முன்​னணி​யில் உள்​ளது. முக்​கிய​மாக, மாதம் ரூ.1,000 உதவித்​தொகை வழங்​கும் தமிழ்ப் புதல்​வன் திட்​டத்​தில் இது​வரை 5 லட்​சத்து 40,511 மாண​வர்​கள் பயனடைந்​துள்​ளனர். மாநிலப் பல்​கலைக்​கழ​கங்​களுக்கு வழங்​கப்​பட்டு வரும் தொகுப்பு நிதி ரூ.767 கோடி​யாக உயர்த்தி வழங்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

சுகாதாரம், தொழில் துறைகளுக்கு ரூ.26,372 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசின் இடைக்​கால பட்​ஜெட்​டில் சுகா​தா​ரம் மற்​றும் தொழில் துறை​களுக்கு ரூ.26,372 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு தாக்​கல் செய்த இடைக்​கால பட்​ஜெட்​டில் கூறி​யிருப்​ப​தாவது: சுகாதாரத் ​துறைக்​கு, இடைக்​கால பட்​ஜெட்​டில் ரூ.22,090 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. ஸ்ரீபெரும்​புதூரில் ரூ.706 கோடி​யில் 18,720 படுக்​கை​கள் வசதி கொண்ட இந்​தி​யா​வின் மிகப்​பெரிய பணி​யாளர் விடுதி அமைக்​கப்​பட்​டது. அடுத்த 5 ஆண்​டு​களில் ரூ.500 கோடி​யில் ‘தமிழ்​நாடு செமி கண்​டக்​டர் இயக்​கம் - 2030’ நடை​முறைப்​படுத்​தப்​படும். இத்​துறைக்கு ரூ.4,282 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

குறு, சிறு, நடுத்தர தொழில் துறைகலைஞர் கைவினை திட்​டத்​தின் கீழ் இது​வரை ரூ.405 கோடி​யில் கடனுதவி மற்​றும் ரூ.83 கோடி மானி​யம் பெற்​றுத்தர 23,879 விண்​ணப்​பங்​களுக்கு ஒப்​புதல்கள் தரப்​பட்​டுள்​ளன. குறு, சிறு, நடுத்தர தொழில் ​துறைக்கு ரூ.1943 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

சுற்​றுச்​சூழல்: இந்​தி​யா​விலேயே அதிக எண்​ணிக்​கை​யில் ராம்​சர் தளங்​களை தமி​ழ​கம் கொண்​டுள்​ளது. ‘நெய்​தல் மீட்சி இயக்​கம்’ மற்​றும் தொடர்​புடைய திட்​டங்​களின்​கீழ் 3,733 ஹெக்​டேர் பரப்​பள​வில் அலை​யாத்தி காடு​களை மீள் உரு​வாக்​கும் செய்​யும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு | இடைக்கால பட்ஜெட் 2026
சட்டப்பேரவையில் ரூ.3.44 லட்சம் கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in