Published : 15 Jun 2015 07:52 AM
Last Updated : 15 Jun 2015 07:52 AM

இந்தியாவிலேயே முதன்முறையாக திண்டுக்கல்லில் பாரம்பரிய சேவல் கண்காட்சி

அழியும் தருவாயில் உள்ள பாரம்பரிய சேவல் இனங்களைப் பாதுகாக்க, இந்தியாவிலேயே முதன்முறையாக திண்டுக்கல்லில் சேவல் கண்காட்சி நேற்று நடை பெற்றது.

இந்தியாவில் அசில், கருங்கால் கோழி, பத்ரா, சிட்டகாங், நிங்கோ பாரி, காளாத்தி, டெங்கி, அங்க லேஸ்வர் உள்ளிட்ட 18 வகையான பாரம்பரிய நாட்டுக்கோழி இனங் கள் உள்ளன. இவற்றில் பிராய்லர் கோழி வருகையால் பெட்டை நாட்டுக் கோழிகள் அழிந்து வருகின்றன. இதில் நாட்டு சேவல் களை சண்டைக்காகவும், அழகுக் காகவும் வளர்க்கின்றனர்.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், கிருஷ்ண கிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போல சேவல் சண்டையும் தமிழர் களின் வீர விளையாட்டாக நடத்தப் பட்டது. சண்டை சேவல்கள், அழகு சேவல்கள் விற்பனைக்காக ஒட்டன்சத்திரம், ஈரோடு, காங் கேயம், தாராபுரம், சங்ககிரி உள்ளிட்ட இடங்களில் மிகப் பெரிய சேவல் சந்தைகள் செயல் படுகின்றன.

இந்நிலையில், சேவல் சண்டை, மனிதர்களுடைய மறைமுக சண் டையாக கருதப்பட்டதால் அரசு அதற்கு தடை விதித்துள்ளது. அதனால், சேவல் சண்டைக்காக சேவல்களை வளர்ப்போர் தற்போது அவற்றை வளர்க்க ஆர்வம் காட்டவில்லை. எனவே இந்தியாவின் பாரம்பரிய சேவல் இனங்கள், தற்போது அழியும் தருவாயில் உள்ளன.

இந்த சேவல் இனத்தை பாது காக்க இந்தியாவிலேயே முதன் முறையாக, திண்டுக்கல் வேடப் பட்டி ராஜேஸ்வரி நகர் சாமியார் தோப்பில், அகில இந்திய சேவல் கண்காட்சி நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடைகள் பல் கலைக்கழக ஆராய்ச்சி மையத் தலைவர் பீர்முகம்மது சேவல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் கேரளம், கர்நாடகம், மகாராஷ் டிரம், ஆந்திரம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் உட்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவல் கள் கலந்து கொண்டன. இவற் றில், மயில் போன்ற வால், கிளி போன்ற மூக்கு, நெட்டை கால் களைக் கொண்ட சேவல்கள் பார்ப்பதற்கு அழகாகவும், கம்பீர மாகவும் இருந்ததால் பார்வை யாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

ஒரு சேவல் ரூ.2 லட்சம்

கண்காட்சி ஒருங்கிணைப் பாளர் திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபாத் கூறியதாவது: அழகுக்காகவும், ராசிக்காகவும் சேவல்களை வளர்க்கின்றனர். சேவல்களின் நிறத்தை பொருத்து அவற்றின் மதிப்பு கூடுகிறது.

கருப்பு கலந்த நிறம், சுத்த வெள்ளை நிற சேவல்களுக்கு சந்தைகளில் தனி மதிப்பு உண்டு. இந்த சேவல்கள், 2 1/2 முதல் 3 அடி உயரம், 3 அடி முதல் 4 அடி நீளமுள்ள வாலையும் கொண்டதாக இருக்கும். இந்த வகை சேவல் ரூ.30 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை விலை போகும். இந்த சேவல்களை வளர்ப்பது, பராமரிப்பது மிகவும் சிரமம். அதிக செலவாகும். அடிக்கடி மருத்துவம் பார்த்து பக்குவமாக வளர்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x