Published : 14 Jun 2015 11:29 AM
Last Updated : 14 Jun 2015 11:29 AM

கேரள மசாலா பொருட்கள் விவகாரம்: பேராசிரியர் குழு அறிக்கை தாக்கல்

கேரளத்தில் தயாரிக்கப்படும் மசாலா பொருட்களில் கூடுதலாக வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுவதாக, அந்த மாநில வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் குழு ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கேரளத்தில் பல லட்சம் ஏக்கர் தனியார் தோட்டங்களில் ஏலக்காய், மிளகு, சீரகம், இஞ்சி, மல்லி உட்பட பல்வேறு பொருட்கள் பயிரிடப்படுகின்றன. இவற்றை தனியார் நிறுவனங்கள் மூலம் அரைத்து மசாலா பொருட்களாகப் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்காக கேரளம், தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆனால், இந்த மசாலா பொருட்கள் நீண்டநாள் கெடாமல் இருக்கவும், ருசியை அதிகப்படுத்தவும், அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக வேதிப் பொருட்களை கலப்பதாகப் புகார்கள் எழுந்தன. மேலும் இவற்றை சமையலில் பயன்படுத்தும்போது, அதன் வீரியத் தன்மை அதிகரித்து புற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளதாக தகவல் பரவியது.

இதையடுத்து, மசாலாப் பொருள் தயாரிப்பு குறித்து ஆய்வு செய்ய திருவனந்தபுரம் வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் குழுவை கேரள அரசு நியமித்தது. இக்குழு கடந்த இரண்டு வாரங்களாக இடுக்கி மற்றும் பிற மாவட்டங்களில் ஆய்வு செய்தது. இதில் தடை செய்யப்பட்ட வீரியம்மிக்க பூச்சி மருந்துகளை, மசாலா பொருள் விளையும் தோட்டங் களில் தெளிப்பதோடு, பாக்கெட் செய்யும்போது வேதிப்பொருளை கூடுதலாக சேர்ப்பதாக அக்குழு நேற்று முன்தினம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து மசாலா பொருட் களில் எந்த மாதிரியான வேதிப் பொருட்கள் கலக்கப் படுகின்றன என்பதை கண்டறிய, அம்மாநில உணவு கட்டுப்பாட்டு துறைக்கு கேரள அரசு நேற்று உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x