Published : 08 Jun 2015 10:20 AM
Last Updated : 08 Jun 2015 10:20 AM

ஆவடி மின்வாரிய அலுவலகத்தில் கணினி பழுதால் மின்கட்டணம் செலுத்துவதில் சிக்கல்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி அருகே மின்வாரிய அலுவலகம் உள்ளது. பொதுமக்கள் தங்களுடைய வீடுகளுக்கான மின்கட்டணத்தை இங்கு செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 15 நாட்களாக இந்த அலுவலகத்தில் உள்ள கணினி பழுதடைந்துள்ளதால் மின்கட்டணம் செலுத்த முடியவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த மின்வாரிய அலுவலகத்தில் தினமும் 400 முதல் 600 பேர் வரை மின்கட்டணம் செலுத்துகின்றனர். கடந்த 15 நாட்களாக கணினி பழுது ஏற்பட்டதால் பணம் கட்ட முடியவில்லை.

இதனால், எந்நேரமும் இங்கு கூட்டம் அலைமோதுகிறது என சமூக ஆர்வலர் தரணிதரன் கூறினார். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த அலுவல கத்தில் மின்கட்டணம் வசூலிக்க ஒரே ஒரு ஊழியர் மட்டுமே உள்ளார். இதனால், மின்கட்டணம் செலுத்த பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மின் வாரிய அதிகாரிகள் இப்பிரச்சி னையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x