Last Updated : 15 Jun, 2015 07:57 AM

 

Published : 15 Jun 2015 07:57 AM
Last Updated : 15 Jun 2015 07:57 AM

செம்பனார்கோவில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வெட்டவெளியில் கிடக்கும் உர மூட்டைகள்: விவசாயிகள் கடும் அதிருப்தி

நாகை மாவட்டம் செம்பனார் கோவிலில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தின் முன்பு, விவசாயி களுக்கு மானியத்தில் வழங்கப் படும் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஜிப்சம் உர மூட்டைகள் கேட் பாரற்று வெட்டவெளியில் கிடக் கிறது.

செம்பனார்கோவில் வட்டாரத் தில் சுமார் 18 ஆயிரத்து 309 ஹெக்டேர் விவசாய நிலங்கள் உள்ளன. இந் நிலங்களுக்கு காவிரி, வீரசோழன் ஆறு, மஞ்சளாறு, மகிமலையாறு உள்ளிட்ட பாசன ஆறுகள் மூலமாகவும் மின்சார மோட்டார்கள் மூலமாகவும் பாசனம் பெற்று விவசாயம் செய் யப்படுகிறது.

ஆறுகளில் போதிய நீர்வரத்து இல்லாதது, விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காது போன்ற காரணங்களால் ஆண்டுக்காண்டு சாகுபடிப் பரப்பு குறைந்து விவ சாயமே கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. இப்பகுதியில் ஏராளமான ஏக்கர் நிலங்கள் தொடர்ந்து வேகவேகமாக வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வரு கின்றன. இந்த நிலையில் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டிய வேளாண்மை அலு வலகங்கள் அதில் போதிய முனைப்பு காட்டுவதில்லை.

அதற்கு உதாரணம்தான் இந்த ஜிப்சம் உரமூட்டைகள் வெட்ட வெளியில் கிடந்து வீணாவது. விவசாய நிலத்தின் உப்புத் தன் மையை மாற்றி, மண் தரத்தை உயர்த்தக்கூடிய ஜிப்சம் எனப்படும் உரம் செம்பனார்கோயில் வட்டார விவசாயிகளுக்கு வழங்கு வதற்காக வரவழைக்கப்பட்டது. தனியார் உரக்கடைகளில் அவ்வள வாகக் கிடைக்காத இந்த ஜிப்சம் உர மூட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல், செம்பனார் கோவில் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தின் முன்பு கடந்த சில மாதங்களாக வீணாகி வருகிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜிப்சம் உரமூட்டைகள் இப்படி கேட்பாரற்று வெட்டவெளியில் போதிய பாதுகாப்பு இல்லாமல் கிடப்பதால் மழையில் நனைந்தும் கிழிந்தும், மூட்டைகள் கிழிந்தும் கிடப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விவசாய சங் கத்தின் தரங்கம்பாடி வட்டச் செய லாளர் டி.ராசையன் கூறும்போது, “உரம் கேட்டு அலுவலகத்துக்கு விவசாயிகள் வந்தால் இழுத் தடிக்கும் அதிகாரிகள் உரத்தை பாதுகாப்பாக வைக்காமல் வீணடித்து வருகின்றனர்.

தரங்கம்பாடி பகுதி கடற் கரையை ஒட்டியுள்ளதால் நிலத் தின் மண் தன்மை உப்பாக மாறி வருகிறது. இத்தன்மையை மாற்றக்கூடிய ஜிப்சம் உரம் விவ சாயிகளுக்கு அதிக அளவில் தேவைப்படும் நிலையில், விவசாயி களுக்கு வழங்காமல் வீதியில் கிடப்பது கடும் கண்டனத்துக் குரியது. சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x