Last Updated : 08 Jun, 2015 06:56 PM

 

Published : 08 Jun 2015 06:56 PM
Last Updated : 08 Jun 2015 06:56 PM

கன்னியாகுமரிக்கு வடமாநில பயணிகள் வருகை அதிகரிப்பு

கன்னியாகுமரியில் கோடை சீசன் முடிந்தநிலையில் விவேகானந்தர் மண்டபத்தில் விடுமுறை நாட்களில் வடமாநிலத்தவர்கள் அதிகமானோர் வருகை தருகின்றனர்.

கன்னியாகுமரியில் ஏப்ரல், மே கோடை சீசன் முடிந்த நிலையில் திரிவேணி சங்கமம், காந்தி மண்டபம், கடற்கரை சாலை, அருங்காட்சியகம், பகவதியம்மன் கோயில், சூரிய அஸ்தமன மையம் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

அதே நேரம் விவேகானந்தர் பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை யிலான நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேர் படகு பயணம் மேற்கொண்டு விவேகானந்தர் பாறைக்கு செல்கின்றனர். விடு முறை நாட்களான சனி, ஞாயிறில் 5 ஆயிரம் பேர் செல்கின்றனர்.

இதுகுறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அலுவலர் ஒருவர் கூறும்போது, “கோடை சீசன் முடிந்ததும் விவேகானந்தர் மண்டபத்துக்குச் செல்ல தினமும் ஆயிரத்துக்கும் குறைவான சுற்றுலா பயணிகள் வருவர் என நினைத்தோம். ஆனால், அதைவிட அதிகமானோர் வருகின்றனர். தமிழகம் மற்றும் கேரள பயணிகளின் வருகை குறைந்துவிட்டது. அதே சமயம் வடமாநில பயணிகள் வருகை அதிகரித்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x