Last Updated : 22 May, 2014 12:20 PM

 

Published : 22 May 2014 12:20 PM
Last Updated : 22 May 2014 12:20 PM

கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் சேர விரும்புவோருக்கு அழைப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் எங்கள் கூட்டணியில், கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைய விரும்புவோரை மனமார வரவேற்போம் என்று தமிழக பாஜக தலைவரும் அக்கட்சி சார் பில் தமிழகத்தில் வெற்றிபெற்ற ஒரே எம்.பி.யுமான பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

தமிழகம் சார்பில் மத்திய அமைச் சரவையில் இடம்பெறுவார் என நம்பப்படும் பொன்.ராதா கிருஷ்ணன், டெல்லி, தமிழ்நாடு இல் லத்தில் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் நீங்கள் நினைத்ததை விட பாஜகவுக்கு குறைந்த தொகு திகள் கிடைக்க காரணம் என்ன?

ஏப்ரல் 20-ம் தேதி வரை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப் பற்றும் என்ற நிலை இருந்தது. தமிழகத்தில் ஆளும் கட்சி யும், ஆட்சி செய்த கட்சியும் பாஜ கவுக்கு அடுத்து வருவார்கள் என்ற நம்பிக்கை இருந்து கொண்டிருந்தது. 20-ம் தேதிக்குப் பின் 144 தடை உத்தரவு போட்டதும் நிலைமை மாறியது. இரவில் பிரச்சாரத்திற்கு கூட்டமாக செல்லக் கூடாது. தனித்தனியாக செல்லலாம் என்றும் ஒரு அறிவிப்பும் வந்தது. இவை இரண்டும் நம்மை பொறுத்தமட்டில் தேவையில்லை எனவும், தவறு செய்பவர்களுக்கு துணை போகின்ற வகையில் இருப்பதும் தெரிய வந்தது.

இதற்காக, 10 மணிக்கு மேல் யாரும் பிரச்சாரத்துக்கு செல்லக் கூடாது என்ற கோரிக்கையை நாம் முன்வைத்தோம். ஆனால் அது ஏற்கப்படவில்லை. இந்த இரு விஷயங்களும் நிச்சயமாக பாஜக மற்றும் தேஜ கூட்டணிக்கு பின்ன டைவை ஏற்படுத்தக் கூடிய மிக முக்கி யமான அம்சங்களாக அமைந்தன.

இதில் தமிழக ஆளும் கட்சி மீது குற்றம் சுமத்துகிறீகளா?

அதனுடன் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சியும் தவறு நடப்பதற்கு துணை போயுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி கள் லாபம், பாஜகவுக்கு கிடைக்க வில்லை என்று உங்கள் கட்சி யின் தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ் கூறியிருப்பது பற்றி..

ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு. என்னைப் பொருத் தவரைக்கும், எங்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் வேலை செய்தார்கள். இதில் சில விஷயங் கள் முன், பின் இருக்கலாம். எல்லா விஷயங்களும் ஒன்றாக இருக்க முடியும் என நான் சொல்ல வில்லை. ஆனால், ஒரு மிகப் பெரிய ஒருங்கிணைந்த முயற்சி யாக அனைவரும் இணைந்து பணியாற்றினார்கள் என்பதில் எந்த கருத்துவேறுபாடும் கிடையாது.

தாமதமாக கூட்டணி அமைந்த தன் தாக்கம் முடிவுகளில் எதி ரொலித்ததாகக் கருதுகிறீர்களா?

தாமதத்திற்கு காரணம், பல் வேறு சிந்தனை படைத்தவர்கள், பார்வை கொண்டவர்களை ஒரு அணியில் திரட்ட பாஜக எடுத்த முயற்சிதான் எனக் கருதலாம். இந்த முதல் முயற்சி தாமதம் ஆகியிருக்கிறது. ஆனால், கூட்டணி அமைக்கப்பட்டது நிச்சயமாக ஒரு பலனை தந்திருக்கிறது.

கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச் சர் பதவி கிடைக்குமா?

ஒரு நாட்டையே வழிநடத்திச் செல்லும் பொறுப்பில் இருக்கும் பிரதமர், தன் அமைச்சரவையில் யாரை, எப்படி பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை முழுமையாக தெரிந்தவராக இந்த நாட்டுக்கு கிடைத்திருக்கிறார். ஒவ்வொரு மாநிலம், மாவட்டம், பகுதி மற்றும் நபர்களை பற்றி தெரிந்தவர் அவர். யாரை எப்படி பயன்படுத்தினால் இந்த நாட்டுக்கு லாபம் என்பது அவருக்கு தெரியும் என்பதால் அவர் சரியான முடிவு களை எடுப்பார். அவருக்கு எந்தவித அழுத்தத்தையும் கொடுப்பது சரியல்ல என நான் கருதுகிறேன்.

பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்த நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது, யாருக்கு எந்த பதவி கொடுப்பார் என்பதை அல்ல. இந்த நாட்டுக்கு அவர் எதைச் செய்வார் என்பதையே எதிர்நோக்கி உள்ளது.

நாடே, உலகமே அப்படி எதிர்பார்க்கும்போது அவர் எதைச் செய்தாலும் சரியாகச் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாங்கள் பரிந்துரைக்கும் அளவுக்கு அவர் எதுவும் தெரியாத தலைவர் அல்ல.

குறிப்பாக விஜய்காந்த், பிரேம லதாவுக்கு அளிக்கப்பட்ட முக்கி யத்துவத்தின் பின்னணி என்ன?

அவர்கள் உழைத்த உழைப்பு. வேட்பாளர்கள் அறிவிப்பதற்கு முன்பாகவே, தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாகவே, கூட்ட ணிப் பேச்சு முடிவதற்கு முன் பாகவே தமிழகத்தின் எல்லா இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கேப்டனும், அவரது துணைவியாரும் மிகக் கடுமையாக உழைத்தனர். இந்த நிலையில் சரியான ஒரு இடத்தில், சரியான ஒரு அங்கீகாரம் அவர்களுக்கு கொடுக் கப்பட்டிருக்கிறது.. இவர்கள் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற வில்லை என்றாலும் கூட, உழைத்த தலைவருக்கு, உழைத்ததற்கான அங்கீகாரம் நாடளுமன்ற மைய மண்டபத்தில் அளிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக, இதன் பின்னணியில் எந்த ஒரு அரசியலும் கிடையாது.

தமிழகத்தில் உங்கள் கூட்ட ணியில் உள்ளவர்கள் தங்கள் கட்சி களை கலைத்து விட்டு பாஜகவில் இணைய வேண்டும் என நரேந்திர மோடி மறைமுகமாக விரும்புவ தாக ஒரு கருத்து நிலவுகிறதே?

(வாய்விட்டுச் சிரிக்கிறார்) அந்தக் கட்சிகளை நாம் அங்கீகரிக்கிறோம். அவர்களுக்கு எங்கள் பாராட்டுகள் இதன் மூல மாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை அந்த முடிவை அவர்கள் எடுக்கிறார்கள் என்று சொன்னால், நாட்டின் நலன்கருதி அனைவருமே வரவேற்கப்பட வேண்டியவர்கள். இதை அவர்கள் செய்ய வேண்டும் என நான் சொல்ல மாட்டேன். ஆனால், அந்தக் கட்சிகளுக்கு உண் டான அங்கீகாரத்தை நாங்கள் தருவோம்.

ஒருவேளை கட்சியைக் கலைத்து விட்டு வந்தார்கள் எனில், அதை விட சிறப்பு வேறு எதுவும் இல்லை. நாம் யாரையும் வரக்கூடாது என்று சொல்லவில்லை. யார் வந்தா லும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.

பிராந்தியக் கட்சிகளுக்கு பல்வேறு கொள்கைகள் உண்டு. அவர்கள் தேசியக் கட்சிகளுடன் எப்படி இணக் கம் காட்டுவார்கள்?

முதல் அம்சமாக பிராந்தியம், மாநிலம் அனைத்தும் தேசியத்திற் குள் அடங்குவது. ஒவ்வொரு பிராந்தியம், மாநிலம் அதன் பகுதிகளின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு ஆட்சி நடத்துவ தாக மோடி கூறியுள்ளார். இந்த நிலையில், யாரையும் விட்டுவிட்டு தேசியக் கட்சியான பாஜக போக முடியாது அல்லவா? அதுபோல், அந்தக் கட்சிகளின் கவனங்களும் இதிலிருந்து திரும்ப முடியாது, அவர்களும் தேசியத்தில் அடங்கி வந்தாக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x