Published : 23 Jun 2015 07:07 AM
Last Updated : 23 Jun 2015 07:07 AM

அதிக கல்விக் கட்டண வசூல் புகார்: பள்ளி நிர்வாகிகள், பெற்றோரிடம் நீதிபதி சிங்காரவேலு விசாரணை

அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 2 தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோரிடம் நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலு நேற்று விசாரணை நடத்தினார்.

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக மாணவ, மாணவிகளின் பெற்றோர் நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலு கமிட்டியிடம் புகார் செய்திருந்தனர். அதன்பேரில், ஆசான் மெமோரியல் பள்ளியில் கல்விக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டது. இருந்தபோதும் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக பெற்றோர் மீண்டும் புகார் தெரிவித்தனர்.

இதேபோல, அடையாறு பாலவித்யா மந்திர் பள்ளியிலும் மாணவர்களிடம் அதிக கல்விக் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, கூடுதல் கல்விக் கட்டண புகார் தொடர்பாக இரு பள்ளிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் குழு உறுப்பினர்கள் ஜூன் 22-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி சிங்காரவேலு கமிட்டி உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, ஆசான் மெமோரியல் பள்ளியின் தாளாளர் ஷியாமளா, முதல்வர் உமா பத்மநாபன் மற்றும் மாணவர்களின் பெற்றோர் - மாணவர் நலச் சங்க நிர்வாகிகள் நேற்று டிபிஐ வளாகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு தலைவர் நீதிபதி சிங்காரவேலு கமிட்டி அலுவலகத்தில் மதியம் 12 மணியளவில் ஆஜராகினர்.

கமிட்டி அலுவலகத்துக்கு வெளியே 300-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் திரண்டதால் டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது ஒரு சிலர் தங்கள் பிள்ளைகளையும் அழைத்து வந்திருந்தனர். ஆசான் மெமோரியல் பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்-மாணவர் நலச்சங்க நிர்வாகிகளிடம் நீதிபதி சிங்காரவேலு விசாரணை நடத்தினர். பின்னர், அடையாறு பாலவித்யா மந்திர் பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோரிடமும் அவர் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணை குறித்து ஆசான் மெமோரியல் பள்ளியின் பெற்றோர் - மாணவர் நலச்சங்க செயலாளர் ஹரி கூறும்போது, “கூடுதல் கல்விக் கட்டணம் வசூலித்ததை பள்ளி நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனர். கூடுதல் கட்டணத்தை திருப்பிக் கொடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x