Published : 30 Jun 2015 07:53 AM
Last Updated : 30 Jun 2015 07:53 AM

நிதி நிறுவனம் நடத்தி ரூ.30 கோடி மோசடி: கிருஷ்ணகிரி எஸ்பியிடம் முகவர்கள் புகார்

கிருஷ்ணகிரியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.30 கோடி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அந்நிறுவனத்தின் முகவர்கள் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட எஸ்பி கண்ணம்மாளிடம் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கிருஷ்ணகிரி ராயப்பன் தெருவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் சிஏஐபிஎல் என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் நிர்வாக இயக்குநராக தமிழ்செல்வன், மேலாளராக சியா மளா, காசாளராக ரமணி மற்றும் சிலர் அலுவலக பணியாளர்களாக பணியாற்றி வந்தனர்.

இந்நிறுவனம் பலவிதமான சேமிப்பு கணக்குகளைத் தொடங்கி பொதுமக்களிடமிருந்து தினம், வாரம், மாதம் என தொகை வசூல் செய்ய முகவர்களை நியமித்தது. அவ்வாறு வசூல் செய்யும் பணத்துக்கு வங்கியைவிட கூடுத லாக வட்டி தருவதாக விளம்பர ப்படுத்தப்பட்டது.

இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட முகவர்கள் பொதுமக்களிடம் பணம் வசூலித்தனர். வசூல் செய்த பணத்தை, அந்நிறுவனம் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி முதல் நிதி நிறுவனத்தின் அலுவலகம் பூட்டிக் கிடக்கிறது.

இதுகுறித்து நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, “அலுவலகம் விரைவில் திறக்கப்படும். நீங்கள் வசூல் செய்து கொடுத்த தொகை முழுவதும் உங்களின் சேமிப்பாளர்களுக்கு திருப்பி வழங்கப்படும்” என நம்பிக்கை தெரிவித்தனர். எங்களை நம்பி சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்திய பலருக்கு முதிர்வடைந்த நிலையில் முதிர்வுத் தொகை பெற்றுத்தருமாறு வற்புறுத்தி வருகின்றனர். இதுபோல சுமார் ரூ.30 கோடி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் நிர்வாக இயக்கு நர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தலைமறைவாகி விட்டனர். எனவே அவர்களை கண்டுபிடித்து, அவர் களிடமிருந்து எங்களுக்கு சேர வேண்டிய தொகையை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x