Last Updated : 08 Jun, 2015 09:07 AM

 

Published : 08 Jun 2015 09:07 AM
Last Updated : 08 Jun 2015 09:07 AM

ஜெயலலிதாவுக்கு வாக்கு சேகரிக்க ஆர்.கே.நகரில் குவியும் அதிமுகவினர்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து அதிமுகவினர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற வுள்ளது. இங்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாள ரும் முதல்வருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.மகேந்திரன் போட்டியிடுகிறார். சமூக ஆர்வலர் கள் டிராஃபிக் ராமசாமி, சசி பெருமாள் உள்ளிட்ட 20-க்கும் அதிகமானோர் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஜெயலலிதா, கடந்த 5-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாள்களே இருக்கும் நிலையில் அங்கு பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஜெயலலிதா வுக்காக பிரச்சாரம் செய்ய 28 அமைச்சர்கள், அதிமுக மாவட் டச் செயலாளர்கள், எம்.பி.க்கள் என 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள் ளது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள் ளாச்சி ஜெயராமன், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரை சாமி உள்ளிட்டோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். தொகுதியில் உள்ள 208 வாக்குச் சாவடிகளும் தேர்தல் பணிக்குழுவில் உள்ள 50 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட் டுள்ளன. 3 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு தேர்தல் அலுவலகம் திறக் கப்பட்டுள்ளது.

வெளியூர்களில் இருந்து வந் துள்ள ஏராளமான அதிமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருப் பதை காண முடிந்தது. முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயகுமாருக்கு ராயபுரம் பகுதியில் 136,137,138 ஆகிய வாக் குச் சாவடிகள் ஒதுக்கப்பட்டுள் ளன.

தண்டையார்பேட்டை கும் மாளம்மன் தெருவில் 125,126,127 ஆகிய 3 வாக்குச் சாவடிகளுக் கான பொறுப்பு, முன்னாள் அமைச் சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் இருந்து அவரது தலைமையில் வந்துள்ள 50 பேர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதுபோல தமிழகம் முழுவதும் இருந்து அமைச்சர்கள், மாவட் டச் செயலாளர்கள், எம்.பி.க்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் ஆர்.கே.நக ரில் குவியத் தொடங்கியுள்ளனர். வாடகைக்கு வீடு பிடித்தும், லாட்ஜ்களிலும் அவர்கள் தங்கி யுள்ளனர். வெளியூர்களில் இருந்து வந்திருப்பவர்களுக்கு அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த அதிமுகவினர் உதவி செய்து வருகின்றனர்.

திருப்பூரில் இருந்து வந்திருந்த அதிமுகவினரிடம் பேசியபோது, ‘‘இன்று (7-ம் தேதி) காலைதான் இங்கு வந்தோம். எங்களிடம் வாக் காளர் பட்டியலின் பிரதி அளிக்கப் பட்டுள்ளது. அதை வைத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்போம். திமுகவில் பொறுப்பில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களின் வாக்கு களைப் பெறுவதே எங்களது இலக்கு’’ என்றனர்.

ஆர்.கே.நகரில் நேற்று முன் தினம் பிரச்சாரத்தை தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஞாயிற்றுக்கிழமை மற்றும் முகூர்த்த நாள் என்பதால் இன்று (நேற்று) பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. சில முக்கியப் பிரமுகர்களை மட்டும் சந்தித்து ஆதரவு திரட்டினோம். முதல்வர் போட்டியிடுவதால் சட்ட விதிகள் மீறப்படாமல் காக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு. ஆனால், வெளியூர் ஆட்களை குவித்து தொகுதிக்குள் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் சகஜமாக பிரச்சாரம் செய்ய ஏதுவான சூழலை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும். இளைஞர் களையும் நடுநிலையாளர்களை யும் நம்பியே களமிறங்கி யுள்ளோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x