Published : 02 Jun 2015 03:24 PM
Last Updated : 02 Jun 2015 03:24 PM

ரூ.367 கோடி மதிப்பிலான ரயில்வே பாலங்கள், பயணியர் மாளிகைகளை ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் 367 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 ரயில்வே மேம்பாலங்களையும், 3 ரயில்வே கீழ்பாலங்களையும், 59 பாலங்களையும், 3 பயணியர் மாளிகைகளையும், ஒரு அலுவலகக் கட்டடத்தையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ளா செய்திக்குறிப்பில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (2.6.2015) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், பாச்சலில் 21 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண். 89-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள 662 மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், தமிழகம் முழுவதும் 367 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 ரயில்வே மேம்பாலங்களையும், 3 ரயில்வே கீழ்பாலங்களையும், 59 பாலங்களையும், 3 பயணியர் மாளிகைகளையும், ஒரு அலுவலகக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் தேவையான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளில் சாலைக் கட்டமைப்பு வசதி மிகமுக்கியப் பங்கினை வகிக்கிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலைக் கட்டமைப்பு வசதியினை மென்மேலும் மேம்படுத்தும் வகையில் தேவைக்கேற்ப மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுவதிலும், சாலைகள் மற்றும் பாலங்களைப் பராமரிப்பதிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதன்படி, வேலூர் மாவட்டம், பாச்சலில் 21 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண். 89-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள 662 மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இந்த மேம்பாலத்தினால் புதுப்பேட்டை, வேலக்கால்நத்தம், மூக்கனூர், அச்சமங்களம், நாட்றாம்பள்ளி பகுதியில் இருந்து திருப்பத்தூர் வழியாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் மற்றும் சென்னை செல்லும் பொதுமக்களின் பயணம் எளிதாவதோடு பயண நேரமும் வெகுவாக குறையும்.

மேலும், வேலூர் மாவட்டம் - புதூரில் ரயில்வே கடவு எண். 82-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம்; கோயம்புத்தூர் மாவட்டம் - நஞ்சுண்டாபுரத்தில் ரயில்வே கடவு எண். 21-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் - மணப்பாறையில் ரயில்வே கடவு எண். 281-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம்; கடலூர் மாவட்டம் - விருத்தாச்சலத்தில் ரயில்வே கடவு எண். 168-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

பெண்ணாடத்தில் ரயில்வே கடவு எண். 181-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம், பச்சையாங்குப்பத்தில் ரயில்வே கடவு எண். 166A-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம், கன்னியாகுமரி மாவட்டம் - புத்தேரியில் ரயில்வே கடவு எண். 32B-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம்; திருப்பூர் மாவட்டம் - உடுமலைப்பேட்டை டவுனில் ரயில்வே கடவு எண். 95-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்டன.

வேலூர் மாவட்டம் - மேலாளத்தூரில் ரயில்வே கடவு எண். 66-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள கீழ்பாலம்; கிருஷ்ணகிரி மாவட்டம் - சாமல்பட்டி ரயில்வே கடவு எண். 96-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள கீழ்பாலம்; கடலூர் மாவட்டம் - திருப்பாதிரிபுலியூரில் ரயில்வே கடவு எண். 159 அருகே கட்டப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட கீழ்பாலம்;சேலம் மாவட்டம் - பாலமேடு, சின்னக்கரட்டூர், வாழக்கோம்பை, தேனூற்றுவாரி, காட்டம்பட்டி, தாதாபுரம், கோவிந்தாபுரம், சந்தைப்பேட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாலங்கள்; நாமக்கல் மாவட்டம் - சிங்களாந்தபுரம் மற்றும் பழைய பாளையம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாலங்கள்; கிருஷ்ணகிரி மாவட்டம் - ராம்புரத்தில் கட்டப்பட்டுள்ள பாலம்; தருமபுரி மாவட்டம் - அத்தனூர், கிருஷ்ணாபுரம், வள்ளிமதுரை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம் - ராப்ராய் எஸ்டேட் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாலம்; கோயம்புத்தூர் மாவட்டம் - கிச்சாகாத்தூர், ஜெ. கிருஷ்ணாபுரம், குமரன்குன்று, திடல் - பொள்ளாச்சி, பெல்லேபாளையம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாலங்கள்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் - தெற்கு பாகனூர், அளுந்தூர், புலியூர், எதுமலை, சனமங்கலம், மகாதேவி, நாகம்பட்டிபள்ளம், முருகூர், சிறுகளப்பூர் (2 எண்ணிக்கை) ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாலங்கள்; பெரம்பலூர் மாவட்டம் - வெங்கனூரில் கட்டப்பட்டுள்ள பாலம்; கடலூர் மாவட்டம் - முட்டம் - மணல்மேடில் கட்டப்பட்டுள்ள பாலம்; அரியலூர் மாவட்டம் - செந்துறையில் கட்டப்பட்டுள்ள பாலம்; புதுக்கோட்டை மாவட்டம் - இசுகுப்பட்டியில் கட்டப்பட்டுள்ள பாலம்; திருவாரூர் மாவட்டம் - ரெகுநாதபுரம் மற்றும் வேலுகுடி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாலங்கள்; நாகப்பட்டினம் மாவட்டம் - வடவூர், ஏனங்குடி, வடமட்டம், கொக்கூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாலங்கள்; மதுரை மாவட்டம் - சென்னம்பட்டி, குமுட்ராம்பட்டி, பள்ளபட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் - சின்னகல்லாத்துப்பட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; திருநெல்வேலி மாவட்டம் - கலிங்கப்பட்டியில் கட்டப்பட்டுள்ள பாலம்; தூத்துக்குடி மாவட்டம் - பிள்ளையார்நத்தத்தில் கட்டப்பட்டுள்ள பாலம்; விருதுநகர் மாவட்டம் - ஆவுடையாபுரம் (2 எண்ணிக்கை), வி. சுந்தரலிங்கபுரம், மல்லையநாயக்கன்பட்டி, சொக்கலிங்கபுரம், வதுவார்பட்டி, எட்டக்காபட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் திறக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் - பிராந்தமங்களம் மற்றும் மஹிபாலன்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாலங்கள்; கன்னியாகுமரி மாவட்டம் - குருந்தன்கோடில் கட்டப்பட்டுள்ள பாலம்; திருப்பூர் மாவட்டம் - குழலிபாளையம் மற்றும் வாளவாடியில் கட்டப்பட்டுள்ள பாலங்கள்; தஞ்சாவூர் மாவட்டம் - பாலக்கரையில் கட்டப்பட்டுள்ள பாலம்; என மொத்தம் 387 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 ரயில்வே மேம்பாலங்களையும், 3 ரயில்வே கீழ்பாலங்களையும், 59 புதிய பாலங்களையும் முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

மேலும், திண்டுக்கல் மாவட்டம் - ஆத்தூரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடங்கள்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் - முசிறியில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகை; திருநெல்வேலி மாவட்டம் - ஆலங்குளத்தில் 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகை; தூத்துக்குடி மாவட்டம் - திருச்செந்தூரில் 38 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகை என 1 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு அலுவலகக் கட்டடம் மற்றும் 3 பயணியர் மாளிகைகள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டன'' என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x