Last Updated : 26 May, 2015 12:10 PM

 

Published : 26 May 2015 12:10 PM
Last Updated : 26 May 2015 12:10 PM

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 14 அறைகள் சேதம்; 4 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள பட்டாசு தொழிற் சாலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 14 அறைகள் சேதமடைந் தன. ஒருவர் தீக்காயமடைந்தார். மேலும் 3 பேர் தப்பி ஓடும்போது விழுந்து காயம் அடைந்தனர்.

ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சிவசங்குபட்டியில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் வழக்கமாக 300 பேர் பணிபுரிவர். அருகில் உள்ள கோயில் திருவிழா என்ப தால் நேற்று 168 பேர் மட்டுமே வேலைக்கு வந்திருந்தனர்.

பட்டாசு ஆலையில் நேற்று காலை பணிகள் தொடங்கின. வெடிக்கும்போது உரிய நிறங்கள் வரவில்லை என வியாபாரிகளிடம் இருந்து பட்டாசு ஆலைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 120 சாட், 150 சாட் போன்ற பேன்ஸிரக வெடி ஒ களில் இருந்த மணி மருந்துகளைப் பிரிக்கும் பணி பட்டாசு ஆலையின் கடைசி வரிசையில் இருந்த 72-வது அறையில் நடைபெற்றது.

அப்போது திடீரென தீப்பொறி ஏற்பட்டு மற்ற பட்டாசுகள் மீது பரவி வெடிக்கத் தொடங்கின. பட்டாசுகளைப் பிரித்துக் கொண் டிருந்த பனையபட்டியைச் சேர்ந்த ஜான்சன் என்பவருக்கு காலில் தீக்காயம் ஏற்பட்டது. அதையடுத்து, வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பட்டாசு ஆலை யில் இருந்து வேகமாக வெளியே ஓடினர்.

அப்போது, மாரியம்மாள், கிளாரன்ஸ், அகஸ்டின் ஆகியோர் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

சிறிது நேரத்தில் அடுத்த அடுத்த அறைகளில் இருந்த பட்டாசு களில் தீப்பொறி பரவியதால் அவையும் வெடித்து சிதறின.

வெடிவிபத்தில், ஒரு அறையின் கட்டிடம் முழுவதும் இடிந்து தரை மட்டமானது. 5 அறைகளின் மேற் கூரைகள் இடிந்து விழுந்தன. மேலும் 8 அறைகள் சேதமடைந்தன.

சாத்தூர், கோவில்பட்டி தீய ணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

விஜயகாந்த் கண்டனம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து சம்பவத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். விதிமுறைகளின்படிதான் பட்டாசு ஆலைகள் இயங்குகின்றனவா? எந்தவித ஆய்வுகளையும் செய் யாமல் உரிமம் வழங்குவதால்தான் பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் ஏற்படுகின்றன என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x