Last Updated : 09 May, 2015 07:45 AM

 

Published : 09 May 2015 07:45 AM
Last Updated : 09 May 2015 07:45 AM

திருக்கழுக்குன்றத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தனியார் கிணற்றிலிருந்து நீர் எடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை: அதிமுக பிரமுகர் எதிர்ப்பால் முட்டுக்கட்டை

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக் குன்றம் பேரூராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, தனியார் கிணற்றில் இருந்து தண்ணீர் பெற்று விநியோகிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நகரச் செயலர் மனு செய்ததால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி யின் 18 வார்டுகளில் சுமார் 34,000 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களின் தேவைக்காக பேரூ ராட்சி நிர்வாகம், 12 கிமீ தொலை வில் உள்ள வல்லிபுரம் கிராமப் பகுதியில் பாலாற்றில் திறந்த வெளிக் கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகித்து வருகிறது.

தனியார் கிணறு..

பேரூராட்சி பகுதிக்கு தினமும் 21 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால், மழையின்றி கிணறு உள்ளிட்ட நீராதாரங்கள் வறண் டுள்ள நிலையில், தற்போது 5 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைக்கிறது. இதனால், பேரூ ராட்சிப் பகுதிகளுக்கு 15 நாட் களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கும் நிலை உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு குடிநீர் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சேரான் குளம் பகுதியில் தனியாருக் குச் சொந்தமான- அதிக தண்ணீர் சுரக்கும் கிணற்றில் இருந்து பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகிக்க முடிவு செய்யப் பட்டது.

சமூக அக்கறை..

இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்தினர் கிணற்றின் உரிமை யாளரை அணுகியபோது, அவர், வாஞ்சையுடன் இலவசமாக தண்ணீர் எடுத்துக் கொள்ள ஒப்புக் கொண்டார். அதேபோல, இந்தக் கிணற்றிலிருந்து பேரூராட்சி பகுதியில் குடிநீர் விநியோகிக்கும் குழாய்களுடன் இணைப்பு ஏற் படுத்துவதற்காக குழாய் பதிக்க, திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறு வனம் ரூ. 3 லட்சம் நிதி வழங்கி யுள்ளது.

எல்லாம் கூடி வந்ததையடுத்து, இந்த குடிநீர் திட்டப் பணிகள் தொடர்பாக கடந்த மாதம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தொடர்ந்து, கிணற்றி லிருந்து தண்ணீர் பெறும் குழாயை, பேரூராட்சி பகுதி குழாய் களுடன் இணைப்பதற்காக பொதுப்பணித் துறைக்குச் சொந்த மான கால்வாயில் குழாய்கள் புதைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.

அதிமுக பிரமுகர் எதிர்ப்பு

இந்தச் சூழலில், திருக்கழுக் குன்றம் அதிமுக நகரச் செயலர் முரளிதாஸ், பொதுப்பணித் துறைக் குச் சொந்தமான கால்வாயில் முறையான அனுமதியின்றி குழாய்கள் பதிப்பதாகக் கூறி, அதைத் தடுத்து நிறுத்துமாறு பொதுப்பணித் துறையிடம் புகார் மனு அளித்தார். இதனால், குழாய் பதிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த குடிநீர் திட்டப் பணியை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி அளிக்கக் கோரி, திருக்கழுக்குன்றம் பேரூ ராட்சித் தலைவர் கிருஷ்ண வேணி தலைமையில் அனைத் துக் கட்சி கவுன்சிலர்கள், திருக் கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமா பந்தியில் கோட்டாட்சியர் பன்னீர் செல்வத்திடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து கிருஷ்ணவேணி கூறும்போது, ‘சேரான்குளம் பகுதியில் தண்ணீர் அதிகளவில் சுரக்கும் தனியார் கிணற்றில் இருந்து தண்ணீர் பெற திட்ட மிட்டோம். கிணற்றின் உரிமை யாளர் ஒப்புக் கொண்டதையடுத்து, அந்தத் தண்ணீர் குடிநீராக பயன் படுத்த உகந்ததா என்று தமிழ் நாடு குடிநீர் வாரியத்தின் மூலம் பரிசோதனை செய்து பார்த்தோம். பரிசோதனை முடிவு சாதகமாகவே கிடைத்தது.

தினமும் 4 முதல் 5 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் பெற வாய்ப்பு உள்ள நிலையில், திட்டத்தை செயல்படுத்த விடாமல் அதிமுக நகரச் செயலர் இடையூறு செய்வதால் கோட்டாட்சியரிடம் மனு அளித்தோம்’ என்றார்.

இதுகுறித்து செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் கூறும்போது, ‘மிகவும் அத்தியா வசியமான திட்டம் என்பதால், இந்தப் பிரச்சினையில் உடனடி யாக விசாரணை நடத்தி உரிய தீர்வு காணப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x