Last Updated : 31 May, 2015 12:13 PM

 

Published : 31 May 2015 12:13 PM
Last Updated : 31 May 2015 12:13 PM

திறப்பு விழாவுக்கு தயாராகும் கலைவாணர் அரங்கம்: ரூ.61 கோடியில் பணிகள் மும்முரம்

புதிய கலைவாணர் அரங்கம் கட்டுமானப் பணிகள் ரூ.61 கோடியில் மும்முரமாக நடந்துவரு கின்றன. அனைத்து பணிகளும் 3 மாதங்களில் முடிந்து, செப்டம்பரில் திறப்புவிழாவுக்கு தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது.

1952-ல் சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்ததால், சென்னை வாலாஜா சாலையில் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய சட்டப்பேரவைக் கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர், ஆந்திரம் பிரிந்ததால் உறுப்பினர்கள் எண் ணிக்கை குறைந்தது. சட்டப் பேரவை மீண்டும் கோட் டைக்கே இடம்மாறியது. சட்டப் பேரவைக்காக கட்டப்பட்ட கட் டிடத்துக்கு ‘பாலர் அரங்கம்’ என்று பெயரிடப்பட்டு, குழந்தை களுக்கான திரைப்படங்கள் திரை யிடப்பட்டன.

அந்த கட்டிடம் 1974-ல் புதுப்பித்துக் கட்டப்பட்டு, கலைவாணர் என்.எஸ்.கிருஷ் ணன் நினைவாக ‘கலைவாணர் அரங்கம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதை 1974 ஜனவரி 29-ம் தேதி அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி திறந்து வைத்தார். அப்போது முதல் பல்வேறு அரசு நிகழ்வுகள், விழாக்கள் உட்பட ஆயிரக்கணக் கான நிகழ்ச்சிகள் கலைவாணர் அரங்கில் நடந்துள்ளன.

இதற்கிடையில், ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என 2008-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதற்காக கலைவாணர் அரங்கம், ராஜாஜி அரங்கம் தவிர மற்ற கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.

இடப் பற்றாக்குறையால் கலை வாணர் அரங்கமும் இடிக்கப்படு வதாகவும், அதற்கு பதிலாக புதிய அரங்கம் கட்டப்படும் என்றும் கருணாநிதி 2009-ல் அறிவித் தார். அந்த ஆண்டு டிசம்பரில் கலைவாணர் அரங்கம் இடிக்கப் பட்டது. ஆனால் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்படவில்லை.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2011-ல் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் 2013-ல் புதிய கலை வாணர் அரங்கம் கட்ட ரூ.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2014 பிப்ரவரியில் பணிகள் தொடங்கின. கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வரு கின்றன.

இதுபற்றி பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மொத்தம் 1.90 லட்சம் சதுரஅடி யில் 4 தளங்களுடன் புதிய கலை வாணர் அரங்கம் தயாராகி வருகிறது. தரைதளத்தில் 500 கார்கள் நிறுத்துமிடம், அலுவலகம் உள்ளது.

முதல் தளம், 2-வது தளத்தில் 1,000 பேர் அமரும் வகையிலான நிகழ்ச்சி அரங்கம் , 3-வது தளத்தில் கண்காட்சிகள், கருத்தரங்குகள், போட்டிகள் நடத்தும் வகையில் 1,000 பேர் அமரும் வசதி கொண்ட பல்நோக்கு அரங்கம் அமைகிறது.

4-வது தளத்தில் தலா 115 பேர் அமரும் வகையில் கருத்தரங்கம், கூட்டம் நடத்த வசதியுள்ள 2 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன இது தவிர அறைகளும் இந்த தளத்தில் உள்ளன. அனைத்து தளங்களுக்கும் நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக சாய்வு அமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

உட்புற வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வெளி யில் பூச்சு வேலை முடிந்துள்ளது. திராவிட கட்டிடக்கலை மற்றும் தமிழக கோயில் சிற்பக்கலை வடிவங்கள் இந்த அரங்கில் இடம்பெறுகின்றன.

இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. பணிகள் அனைத்தும் இன்னும் 3 மாதங்களில், அதாவது ஆகஸ்ட் இறுதிக்குள் முடிந்து, திறப்பு விழாவுக்கு செப்டம்பரில் தயாராகிவிடும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x