Published : 10 May 2015 07:33 AM
Last Updated : 10 May 2015 07:33 AM

சிறந்த பத்திரிகையாளருக்கு ரங்கஸ்வாமி பார்த்தசாரதி பெயரில் விருது: இந்த ஆண்டு சேகர் குப்தா பெறுகிறார்

இந்திய சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பத்திரிகையாளராக பணியாற்றிய சென்னையைச் சேர்ந்த ரங்கஸ்வாமி பார்த்த சாரதி பெயரில் சிறந்த பத்திரிகை யாளருக்கு இந்த ஆண்டு முதல் விருது வழங்கப்படுகிறது. மேலும் ஐந்து இதழியல் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப் படவுள்ளது.

ரங்கஸ்வாமி பார்த்தசாரதி சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்று 1935-ம் ஆண்டில் ‘தி மெயில்’ பத்திரிகையில் பணிபுரிய ஆரம்பித்தார். 1944-ம் ஆண்டில் ‘தி இந்து’வில் சேர்ந்தார். ‘தி இந்து’வின் 100 வருட கால வரலாற்றை, இந்திய சுதந்திர வரலாற்றோடு இணைத்து அவர் எழுதிய நூல் 1978-ல் வெளியானது. அவரது 100-வது பிறந்தநாள் ஆண்டை கொண்டாடும் விதமாக அவரது மகன் ராம் மோகன் மற்றும் பேரன் மாதவ் நாராயண், ‘ரங்கஸ்வாமி பார்த்தசாரதி’ பெயரில் சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்க வுள்ளனர்.

இது குறித்து நேற்று சென்னை யில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ராம் மோகன் கூறிய தாவது: ரங்கஸ்வாமி பார்த்தசாரதி மிகவும் விரும்பிய இதழியல் துறைக்கு அவரது பெயரில் ஏதாவது செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்பினோம். இந்த ஆண்டு சிறந்த பத்திரிகையாளர் விருது ‘இந்தியா டுடே’ குழுமத்தின் துணைத் தலைவராக இருக்கும் சேகர் குப்தாவுக்கு வழங்கப்படுகிறது. மேலும் ஆசிய ஊடக கல்லூரியின் ஐந்து மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் தலா ரூ.1 லட்சம் கல்வி ஊக்கத்தொகையாக வழங் கப்படும். இதனை ஆண்டுதோறும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிய ஊடக கல்லூரியின் டீன் நளினி ராஜன் கூறும்போது, “பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே இதழியல் துறையில் நுழைந்த ரங்கஸ்வாமி பார்த்தசாரதி இதழியல் துறையில் தேசியவாத இயக்கத்தின் அங்கமாக இருந்திருக்கிறார். எங்கள் கல்லூரியில் சேர விரும்பும் தலித், பழங்குடி மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை பயன்படும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x