Published : 24 May 2015 01:41 PM
Last Updated : 24 May 2015 01:41 PM

வனப்பகுதி சாலைகளில் வேகத் தடை அமைக்க முடிவு: விபத்துகளில் விலங்குகள் பலியாவது அதிகரிப்பு

தமிழகத்தில் வனப்பகுதிகள் வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு வன விலங்குகள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. அதனால், வனவிலங்குகளைக் காப்பாற்ற வனப்பகுதி சாலைகளில் ஒரு கி.மீ. தொலைவுக்கு ஒரு இடத்தில் வேகத்தடை அமைக்க தமிழ்நாடு வனத்துறை முடிவு செய்துள்ளது.

கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக் கல், ஈரோடு, சேலம், திருநெல்வேலி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வனப்பகுதிகள் வழியாக அதிகளவில் தேசிய, மாநில மற்றும் மாவட்ட சாலைகள் செல்கின்றன.

இந்த சாலைகள் செல்லும் பகுதியில் அடர்ந்த காப்புக் காடுகள், சுற்றுலாத் தலங்கள், ஆன்மிக இடங்கள் உள்ளன. அதனால், வனப்பகுதி சாலைகளில் தற்போது விலங்குகள் நடமாட்டம் மட்டுமின்றி, மனிதர்களின் நடமாட் டம், வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளன.

மக்கள்தொகையைவிட தற் போது தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால், வனப்பகுதி சாலை களின் வழியாக வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் வாகனங்களில் அடிபட்டு யானை, சிறுத்தை, புள்ளிமான், தவளை, பாம்புகள், காட்டுமாடுகள் உள் ளிட்ட பல்வேறு அரியவகை பெரிய, சிறிய வனவிலங்குகளின் உயிரிழப்புகள் அதிகரித் துள்ளன.

அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும்போது வாகனங்களில் அடிபட்டு இறக்கும் பெரிய விலங்குகள் மட்டுமே நம் கண்ணுக்கு தெரிகின்றன.

நம் கவனத்துக்கு வராமலேயே முதுகெலும்பற்ற பிராணிகள், பூச்சிகள், தவளைகள், மெல்லுடலிகள், ஊர்வன, பறப் பன, சிறு பாலூட்டிகள் என தின மும் பல ஆயிரம் சிறிய ஜீவ ராசிகள் இறக்கின்றன. இதில் தவ ளைகள்தான் அதிகளவு வானகங் களில் அடிபட்டு இறக்கின்றன.

கடந்த காலத்தில் உணவு சங்கிலி முறையில் பெரிய விலங்குகள் சிறிய விலங்குகளை அடித்து உண்பது மற்றும் வேட்டையாடுவதால் வனப்பகுதியில் விலங்குகள் இறப்பு அதிகளவு இருந்தது. தற்போது வாகனங்களில் அடி பட்டு இறக்கும் விலங்குகள் எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், தமிழ்நாடு வனத்துறை அடர்ந்த வனப்பகுதிகள், சுற்றுலாத் தலங்கள், ஆன்மிக பகுதிகள் வழியாக செல்லும் சாலைகளில் ஒரு கி.மீ.க்கு ஒரு இடத்தில் வேகத்தடை அமைக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சமீபத்தில் அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் வாகனப் போக்குவரத்தால் உயிரினங்கள் இறப்பு குறித்து 11 கி.மீ. நீள சாலை களில் 17 மாதங்களுக்கு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆராய்ச்சியில், 10,500 விலங்குகள் அடிபட்டு இறந்ததாக கணக்கிடப்பட்டது. அதில் 7,600 தவளைகள் மட்டும் இறந்தது அதிர்ச்சியாக இருந்தது. குளிர்நாடான அமெரிக்கா போன்ற நாடுகளிலே வனவிலங்குகளின் சாலை உயிரிழப்பு அதிகமாக இருப்பதால் இந்தியா, இலங்கை போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் விலங்குகளை கணக்கிட்டால் கற்பனைக்கு எட் டாத எண்ணிக்கையில் இருக்கும். வனப்பகுதி சாலைகள் குறுகலாக வும், வளைந்து நெளிந்தும் செல் கின்றன.

அதனால், விலங்குகள் சாலைகளை கடந்து செல்ல வாக னங்கள் போதிய கால அவகாசம் வழங்குவதில்லை. அதனால், விலங் குகள் உயிரிழப்பு அதிகரிக் கிறது.

வேகத்தடையை பொருத்த வரையில் கீழே இறங்கும் சாலை கள், மேட்டுப்பகுதிகளில் போட முடியாது. மேட்டுப்பகுதிகள் ஏறி, இறக்கம் முடிந்த இடத்தில் வாகனங் கள் வேகத்தை அதிகரிக்காமல் இருக்க வேகத்தடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, இந்த வேகத்தடைகள், கொடைக் கானல் சுற்றுலாத் தலங் கள், காட்ரோடு சாலைகளில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள் ளது.

இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் தமிழகத்தின் மற்ற வனப்பகுதி சாலைகள் முழுவதிலும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x