Last Updated : 06 May, 2015 08:26 AM

 

Published : 06 May 2015 08:26 AM
Last Updated : 06 May 2015 08:26 AM

தமிழகத்துக்கு மாவோயிஸ்ட்கள் வருவதற்கு காரணம் என்ன?- கைது செய்ய கியூ பிரிவு போலீஸார் தீவிரம்

மாவோயிஸ்ட்கள் தமிழகம் வரு வதற்கான காரணம் குறித்து கியூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அண்டை மாநிலங்களில் இருந்து இங்கு வந்துள்ளவர்களை பிடிக் கும் முயற்சியில் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர்.

இது குறித்து கியூ பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறிய தாவது: மாவோயிஸ்ட்களின் முதல் நோக்கமே மக்களைத் திரட்டி அரசுக்கு எதிராக போராடுவது தான். சீனாவில் மாசே துங் (மாவோ) மக்களைத் திரட்டி கொரில்லா போரில் ஈடுபட்டார். அதையே இந்தியாவிலும் மாவோயிஸ்ட் கள் பின்பற்றி வருகின்றனர். இந்தி யாவில் பிஹார், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் பலமாக உள்ளனர். ஆனால் தென் னிந்தியாவில் கேரளா, ஆந்திரா வில் மட்டும் மிகமிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். தமிழ கத்தில் அவர்களால் காலூன்ற முடியவில்லை. ஆனால் சமீப காலமாக இந்த நிலை மாறிவிட்டது.

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளைப் பிடித்து புரட்சி கர பகுதியாக மாற்றும் திட்டத் துடன் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக தமிழகத் தில் உள்ள சிலருடன் சேர்ந்து திட்டம் தீட்டி வருகின்றனர். இவர் களுக்கு ஒரு கட்சியும் உதவி செய்து வருகிறது.

மலைப்பாங்கான இடங்களில் வசிக்கும் பழங் குடியின மக்களை வைத்து வட மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் வளர்ந்தனர். ஆனால் தமிழகத்தில் இப்படி செய்ய முடியவில்லை. இதனால் நகருக்குள் வந்து தங்களது இயக்கத்திற்கு ஆட் களை திரட்டும் பணியில் முதல்கட்டமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் புறநகர் பகுதிகளில் இவர்கள் தீவிரமாக செயல்படுவதை கண்டுபிடித்து இருக்கிறோம். மாவோயிஸ்ட்களில் ஆயுதப்பிரிவும் உள்ளது. தமிழ கத்தில் 30-க்கும் அதிகமான ஆயுதப் பிரிவு மாவோயிஸ்ட்களும், நூற் றுக்கும் அதிகமான மாவோயிஸ்ட் அமைப்பினரும் இருக்க வாய்ப் பிருக்கிறது. இவர்கள் அமைதியாக செயல்பட்டு தங்களது இயக்கத்தை வளர்த்து வருகின்றனர்.

தற்போது கைது செய் யப்பட்டுள்ள மாவோயிஸ்ட் ரூபேஷை பிடித்துக் கொடுப் போருக்கு கேரளாவில் ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கேரளாவில் இருந் தால் பிடிபட்டு விடுவோம் என்று பயத்தில்தான் அவர் தமிழ கம் வந்திருக்கிறார்.

ஆந்திரா, கேரளத்தில் மாவோ யிஸ்ட்கள் மற்றும் நக்சல்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதால் அவர்கள் அண்டை மாநிலமான தமிழகத் திற்கு தப்பி வருகின்றனர் என்று தெரிகிறது. இங்கிருக்கும் சிலரின் உதவியால் பலர் இப்படி வந்துள்ளனர். அவர்கள் அனை வரையும் பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x